CBSE +2 results 2026: இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியாகிறதா சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்?
சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் மே மாதம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை 2026 ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாரியத்திடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான தேதி அறிவிக்கப்படவில்லை.
கடந்த 2025ஆம் ஆண்டு மே 13ஆம் தேதியும், 2024ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதியும், கடந்த 2023 மே 12-ஆம் தேதியும், 2022ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதியும், 2020ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகின.
மாணவர்கள் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் தங்கள் மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம்.
cbse.gov.in
results.cbse.nic.in
cbseresults.nic.in ஆகிய இணையத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
மேலே உள்ள ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்."CBSE Class 12 Result 2026" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.உங்கள் ரோல் எண் (Roll Number), அட்மிட் கார்டு ஐடி மற்றும் பள்ளி எண் ஆகியவற்றை உள்ளிடவும். விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும். அதைச் சரிபார்த்துப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
அதிகப்படியான மாணவர்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க, கீழ்க்கண்ட வசதிகளைப் பயன்படுத்தலாம்.
செயலிகள்: DigiLocker மற்றும் UMANG செயலிகள் மூலம் உங்கள் டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம்.
IVRS: தொலைபேசி அழைப்பு (Interactive Voice Response System) மூலமாகவும் முடிவுகளை அறியலாம்.
SMS வசதி: உங்கள் மொபைலில் 'cbse12 [roll number]' எனத் தட்டச்சு செய்து 7738299899 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், முடிவுகள் உங்கள் எண்ணிற்கே வந்து சேரும்.
மாணவர்கள் தங்கள் உள்நுழைவு விவரங்களை (Credentials) முன்கூட்டியே தயாராக வைத்துக் கொள்ளவும். சமீபத்திய மற்றும் துல்லியமான அறிவிப்புகளுக்குத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைக் கண்காணிப்பது அவசியம்.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications