CBSE +2: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் எந்த மண்டலம் டாப்? சென்னைக்கு எத்தனையாவது இடம்?
சென்னை: இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டது. 10ஆம் வகுப்பை போல் 12 ஆம் வகுப்பிலும் திருவனந்தபுரம் மண்டலமே தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 85.20 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 88.39 சதவீதமாகும்.

இந்த ஆண்டு திருவனந்தபுரம் மண்டலம் 95.62% தேர்ச்சி சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னை 93.84% மற்றும் பெங்களூரு 93.19% தேர்ச்சி விகிதத்துடன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு விஜயவாடா (99.60%) மற்றும் திருவனந்தபுரம் (99.32%) அதிக தேர்ச்சி விகிதத்தைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, விஜயவாடா 92.77% பெற்று நான்காம் இடத்திலும், டெல்லி மேற்கு 92.34% மற்றும் டெல்லி கிழக்கு 91.73% அதற்கு அடுத்த இடங்களிலும் உள்ளன. அகமதாபாத் 90.60% மற்றும் குர்கான் 88.45% தேர்ச்சிப் பதிவு செய்தன.
லூதியானா 87.92%, புனே 87.32% மற்றும் அஜ்மீர் 86.78% ஆகிய மண்டலங்கள் குறிப்பிடத்தக்க தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
மேலும், பஞ்ச்குலா 85.73%, ராஞ்சி 85.01%, குவாஹாட்டி 83.41% மற்றும் லக்னோ 82.21% தேர்ச்சியைப் பதிவு செய்தன. புவனேஸ்வர் 81.71%, டேராடூன் 81.42% மற்றும் ராய்ப்பூர் 80.88% ஆகவும் தொடர்ந்தன.
போபால் 79.43% மற்றும் நொய்டா 79.02% தேர்ச்சி பெற்றன. பட்னா 74.45% ஆகவும், பிரயாக்ராஜ் 72.43% உடன் மிகக் குறைந்த தேர்ச்சி சதவீதத்தைப் பதிவு செய்தது.
மாணவர்களின் வசதிக்காக, அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மட்டுமின்றி, DigiLocker, UMANG செயலி மற்றும் SMS சேவை மூலமாகவும் தங்கள் முடிவுகளை அணுகலாம்.
இணையதளத்தில் முடிவுகளைப் பதிவிறக்குவதற்கான வழிமுறைகள்: முதலில் results.cbse.nic.in தளத்திற்குச் செல்லவும். "CBSE Class 12 Result 2026" இணைப்பைக் கிளிக் செய்யவும். அடுத்ததாக, ரோல் நம்பர், பள்ளி எண் மற்றும் அட்மிட் கார்டு ஐடி போன்ற தேவையான விவரங்களை உள்ளிட்டுச் சமர்ப்பித்து, உங்கள் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்யலாம்.
DigiLocker மூலம் முடிவுகளைப் பார்க்க: அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலியைத் திறக்கவும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி உள்நுழையவும். உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டுச் சரிபார்த்த பிறகு, "Issued Documents" பகுதிக்குச் செல்லவும். அங்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தை (CBSE) பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து, "Class 12 Marksheet 2026" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
ரோல் நம்பர் மற்றும் தேர்ச்சி பெற்ற ஆண்டு போன்ற விவரங்களை உள்ளிட்டுச் சமர்ப்பித்தவுடன், டிஜிட்டல் மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும். எதிர்காலப் பயன்பாட்டிற்காக அதைப் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாகச் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications