CBSE Topper: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்றது யார்? வெளியான விவரம்!
சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் கட் ஆப் மதிப்பெண்களில் எந்த மாணவன் டாப் என்பதை பார்க்கலாம்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 12ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு முடிவுகள் 2026 மற்றும் அதன் முதலிடம் பிடித்தவர்களின் பட்டியலை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 85.20 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 88.39 சதவீதமாகும். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 94 ஆயிரம் பேர் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அது போல் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 88.86 சதவீதம், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 82.13 சதவீதம், மூன்றாம் பாலினத்தவர் 100 சதவீதம் தேர்ச்சி ஆகும். மாணவர்களை விட 6.73 சதவீதம் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம் ஆகும்.
பிசிஎம் (Physics, Chemistry, Maths), பிசிபி (Physics, Chemistry, Biology) பிரிவுகளில் முதலிடம் பிடித்தவர்கள், தரவரிசைப் பட்டியல் உள்ளிட்ட தேர்வு முடிவுகளை மாணவர்கள் இப்போது சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் சரிபார்க்கலாம்.
இந்த ஆண்டு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (On-Screen Marking - OSM) என்ற ஒரு புதிய மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இது தேர்வு முடிவுகள் மிகத் துல்லியமாகவும், விரைவாகவும் வெளியாக உதவியதாகக் கூறப்படுகிறது.
பாலின வாரியான தேர்ச்சி விகிதங்களைப் பார்க்கும்போது, மாணவிகள் மீண்டும் சிறந்து விளங்கியுள்ளனர்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் முதலிடம் பிடித்தவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 98.4% மதிப்பெண்களுடன் நயிதிக் என்ற மாணவன் முதலிடம் (PCM) பிடித்துள்ளார். அது போல் PCB பாடப்பிரிவுகளில் ஜெஷான்தீப் கவுர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
PRAGYA JAIN (பிசிஎம்) 97.8% பெற்று இரண்டாம் இடத்தையும், SIRJAN (பிசிபி) 97.6% உடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். SOURASIS MANDAL (பிசிஎம்) 97.4% மற்றும் MANVI GOYAL (பிசிபி) 97.2% பெற்று அடுத்த இடங்களைப் பிடித்தனர்.
பிசிஎம் (PCM) பிரிவு எனச் சொல்லப்படும் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
இதில், NAITIK 98.4%, PRAGYA JAIN 97.8%, SOURASIS MANDAL 97.4% மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இவர்களது சாதனைகள் வழிகாட்டியாக அமைகின்றன.
பிசிபி (PCB) பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் சிறந்து விளங்கியவர்கள் இவர்களே. JASHANDEEP KAUR 98.4%, SIRJAN 97.6%, MANVI GOYAL 97.2% மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மருத்துவ மற்றும் உயிரியல் அறிவியல் படிப்புகளை இலக்காகக் கொண்ட மாணவர்களுக்கு இந்தத் தேர்ச்சிப் பட்டியல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களில் மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், சிறந்த மாணவர்களாகப் பாராட்டப்படுகிறார்கள்.
இவர்களுடைய வெற்றி, இந்தத் தேர்வு எவ்வளவு கடினமானது என்பதையும், மாணவர்கள் எந்தளவுக்குத் திறமையாகப் படிக்கிறார்கள் என்பதையும் நமக்குக் காட்டுகிறது. இவர்களின் வெற்றி, மற்ற மாணவர்களுக்கும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் உத்வேகத்தையும் தருகிறது.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு தேர்வு முடிவுகளை சரிபார்க்க, மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று "CBSE Class 12 Result 2026" இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். உங்கள் ரோல் நம்பர், பள்ளி எண், அட்மிட் கார்டு ஐடி ஆகியவற்றை உள்ளிட்டு 'சப்மிட்' (Submit) பொத்தானை அழுத்தவும். உங்கள் தேர்வு முடிவு திரையில் தோன்றும், அதை பதிவிறக்கம் செய்து அச்சிட்டுப் பாதுகாத்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications