9ம் வகுப்பு பாடத்தில் டேட்டிங் குறித்த பாடம்.. கிளம்பிய எதிர்ப்பு.. சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்
சென்னை: 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் டேட்டிங் குறித்த பாடம் இடம்பெற்றுள்ள விவகாரம் குறித்த சர்ச்சைக்கு சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் Dating and Relationship (புதிய நட்புறவை உருவாக்குதல் மற்றும் உறவுகள்) என்ற தலைப்பிலவான பாடம் இடம் பெற்றுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன.

இதை எதிர்த்து கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும் பதின்பருவ மாணவர்களுக்கு இது போன்ற பாடங்கள் அவசியமில்லை. எனவே அந்த பாடத்தை புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் அந்த பாடப்புத்தகம் தொடர்பாக சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. அதாவது அந்த பாடப்புத்தகத்தை அவர்கள் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமூகவலைதளங்களில் பரவும் பாடத்தின் உள்ளடக்கம், ககன்தீப் கவுர் எழுதிய சுய விழிப்புணர்வு மற்றும் அதிகாரம் அளிப்பதற்கான வழிகாட்டி என்ற நூலில் இருந்து அந்த பகுதி வெளியிடப்பட்டுள்ளது.

இதை சிபிஎஸ்இ வெளியிடவில்லை. மேலும் எந்த தனியார் பதிப்பகங்களின் புத்தகத்தையும் சிபிஎஸ்இ பரிந்துரை செய்யவில்லை. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளை கொண்ட கேள்வி இடம்பெற்றிருந்ததற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அது போல் கடந்த 2018ஆம் ஆண்டு 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் வர்ணாசிரமத்தின்படி கீழ் ஜாதி எது என கேள்வி கேட்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அது போல் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் அண்ணல் அம்பேத்கரும் அப்துல் கலாமும் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்ற சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றதை அடுத்து பலர் கண்டனம் தெரிவித்தனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications