நாளை மறுநாள் பொதுத்தேர்வு.. 10, +2 பொதுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததா? சிபிஎஸ்இ மறுப்பு
சென்னை: நாளை மறுநாள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்துவிட்டதாக பரவும் தகவலை சிபிஎஸ்இ முற்றிலுமாக மறுத்துள்ளது. அதோடு மாணவர்கள், பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.
நாடு முவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு வரும் 15ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது. மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தான் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துள்ளதாக வலைதளங்களில் தகவல்கள் பரவ தொடங்கியது. இதனால் பெரிய குழப்பம் ஏற்பட்டது. மேலும் சிபிஎஸ்இ நிர்வாகம் இதுபற்றி விசாரணையை தொடங்கியது.
இந்த விசாரணையின்போது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் கசியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக சிலர் தவறான தகவல்களை வலைதளங்களில் பதிவிட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் தான் சிபிஎஸ்இ சார்பில் எக்ஸ் வலைதளத்தில் இந்த விவகாரம் குறித்து முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‛‛சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது. மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் தவறான செய்தி பரப்பப்படுகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். ஏனென்றால் எந்த வினாத்தாளும் கசியவில்லை. மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் அறிவித்தபடி வரும் 15ம் தேதியில் இருந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெறும். பொதுத்தேர்வு குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கவால்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தும் நபர் பற்றி தெரிந்தால் எங்களுக்கு தகவல் அளிக்கலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications