ஆளும் கட்சியை விமர்சித்ததால் எனது வீட்டில் போலீஸ் ரெய்டு.. எந்த பயமும் இல்லை! அன்பில் மகேஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 18 ஆம் தேதியன்று நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் ஆளும் கட்சியை விமர்சித்ததால்தான் எனது வீட்டில் போலீஸ் ரெய்டு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி, அரசியல் மடைமாற்றத்துக்காக எனது வீட்டில் சோதனை நடந்துள்ளது. பொய் வழக்கு போட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சொந்தமான சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Anbil Mahesh to appear sep 18 - Raid Concluded in his Residence after 8 hour search

காலை முதலே 8 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி வரும் நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சோதனை ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

விசாரணை நடத்தும் போது முறையாக நடத்துங்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். சந்தேகத்தின் அடிப்படையில் எனது வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. வரும் 18 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அச்சுறுத்தும் வேலைகளில் தவெக அரசு ஈடுபடுகிறது.

விசாரணைக்கு ஆஜரான பின் தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் எனது வீட்டில் சோதனை செய்தனர். டார்க்கெட் அவர் தான். நீங்கள் இல்லை என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். எனது வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை செய்ய அனுமதித்தேன். சோதனைகளை சட்டப்படி எதிர்கொள்வேன். 8 மணி நேரமாக எனது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தியது.

மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.. ஆளும் கட்சியை விமர்சித்ததால்தான் எனது வீட்டில் போலீஸ் ரெய்டு நடக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி, அரசியல் மடைமாற்றத்துக்காக எனது வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. என் மீது பொய் வழக்கு போட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+