ஒருவர் கத்தியால் வெட்ட.. இன்னொருவர் செல்போனை பிடுங்க.. வயிற்றில் புளியை கரைக்கும் பரபரப்பு வீடியோ!
ஸ்விகி தாக்கி செல்போனை பறிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: பைக்கில் நின்று கொண்டிருந்த ஸ்விகி ஊழியரை அசால்ட்டாக கத்தியால் தலையில் வெட்டிவிட்டி தாக்குகிறார்கள் 2 இளைஞர்கள்.. ஒருவர் ஊழியரை வெட்ட, இன்னொருவர் செல்போனை பறித்து கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி சென்னைவாசிகள் வயிற்றில் புளியை கரைக்கிறது!
சென்னை காசிமேடு எஸ்என் செட்டி தெரு கொடிமரத்து சாலை அருகே எச்.எம்.டி. நகை கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஸ்விகி நிறுவனத்தின் டெலிவரி பாய் துளசிராம் மழைக்காக இந்த கடை வாசலில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து, இரு இளைஞர்கள் வந்து, துளசிராமன் தலையில் கத்தியால் வெட்டி விட்டு, கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

பல்சர் பைக்
பிறகு போகிற போக்கில், 2 பேரும், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே பல்சர் பைக்கையும் திருடி கொண்டு போயுள்ளனர். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில், இப்போது சிக்கி விட்டனர். மொட்டை தோட்டம் பகுதியில் பல்சர் வண்டியை ரெண்டு பேரும் தள்ளி வந்து கொண்டிருந்தனர்.

கத்தி
அப்போது இருவரையும் போலீசார் சந்தேகத்தில் விசாரணைக்கு அழைத்தபோது, தப்பி ஓடினார்கள். இதனையடுத்து இருவரையும் போலீசார் விரட்டிச் சென்ற போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரையும் மிரட்டி உள்ளனர்.

எஸ்கேப்
வளைத்து பிடிக்க முயன்றபோது ஒருவர் எஸ்கேப் ஆகிவிட, மற்றொருவர் சிக்கி உள்ளார். அவரிடம் 2 கத்தி பறிமுதல் செய்துள்ளனர். கைதானவர், புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கமாள் தெருவை சேர்ந்த லோகேஷ் என்கின்ற பல்லு லோகேஷ் என்பது தெரியவந்தது.

கொலை திட்டம்
இவர்களுக்கு ரவுடி கண்ணன் என்பவர் எதிரியாம். அதனால் அவரை கொலை செய்ய, தண்ணி அடித்துவிட்டு கத்தியுடன் கொலை செய்ய கிளம்பிய போதுதான் போலீசார் பிடித்துவிட்டனர். இப்போது லோகேஷ் சிறையில் உள்ளார். மற்றொரு ரவுடியை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications