அதிர்ச்சி வீடியோ... சுல்தானை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்.. தடுக்காமல் வேடிக்கை பார்த்த மக்கள்!
இளைஞரை 2 பேர் ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தி உள்ளார்கள்
Recommended Video
சென்னை: சுல்தானை ஓட ஓட விரட்டி சென்று 2 பேர் தாக்கியதை கண்டு பொதுமக்கள் ஓடவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். சென்னை பாரிமுனையில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முகமது சுல்தான். இவர் பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு ஆட்டோவில் 2 பேர் உட்கார்ந்து, கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த சுல்தான், பக்கத்தில் நின்றிருந்த டிராபிக் போலீசாரிடம் புகார் சொல்லி உள்ளார்.
சுல்தான் தங்களை பற்றி போலீசில் போட்டு கொடுத்ததை கண்ட கஞ்சா பிடித்து கொண்டிருந்த அந்த 2 பேரும், ஆத்திரம் அடைந்தனர். அதனால் சுல்தானை நோக்கி கொலை வெறியுடன் ஓடிவந்தனர். இதை பார்த்ததும், சுல்தான் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்.
ஆனாலும் அவர்கள் 2 பேரும் விடவே இல்லை. சுல்தானை துரத்தி துரத்தி அடித்தார்கள். சாலை முழுக்க மக்கள் தலைகளும், வாகனங்களும் நெருக்கி கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது. பொதுமக்கள் முன்னிலையில் இப்படி விரட்டி தாக்குகிறோமே என்ற அச்சம் கொஞ்சம்கூட இல்லாமல், சுல்தானை நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்தனர் அந்த 2 பேரும்.
இதை பார்த்து அதிர்ச்சியான பொதுமக்களால், இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி காமராவில் பதிவாகி, அது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, கஞ்சா பிடித்த நபர்களை கைது செய்து, 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெயர் ராபர்ட் மற்றும் தீனா என்று தெரியவந்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications