சென்னையில் அதிர்ச்சி.. அலறி அடித்து ஓடிய வடமாநில தொழிலாளர்கள்.. சிலிண்டர் வெடித்து 7 பேர் படுகாயம்!
சென்னை: சென்னை பூந்தமல்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசித்து வந்த வீட்டில் இன்று மதியம் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் படுகாயம் அரைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்துச் சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியை அடுத்த சக்தி நகர் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். அவர்கள் இன்று மதியம் உணவு தயாரிப்பதற்காக கேஸ் சிலிண்டரை ஆன் செய்துள்ளனர். அப்போது அதிலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

இதனைப் பார்த்து அதிர்ந்து போன வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து கூச்சலிட்டபடி அவசரமாக வெளியேறி உள்ளனர். சத்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிக்கக்கூடிய குமார், சரஸ்வதி, ஜெகன், ஆகியோர் என்ன என்று வெளியே வந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் தீ பரவிய நிலையில் அவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
மேலும், சிலிண்டர் வெடித்ததால் வீட்டின் ஒருபகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் குமார், ஜெகன், சரஸ்வதி, யுவராஜ், ஷீலா, ரிஷி மற்றும் நீலக்குமார் ஆகிய ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் தீக்காயமடைந்த சிறுவர்கள் உட்பட 7 பேரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த பூவிருந்தவல்லி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வடமாநில தொழிலாளர்கள் வீட்டில் உள்ள காலி சிலிண்டர்களை வாங்கி வைத்து, பெட்ரோல் பங்க்குகளில் ஆட்டோ மற்றும் வாகனங்களுக்கு நிரப்பக்கூடிய கேஸை நிரப்பி வீட்டில் உபயோகப்படுத்தி வந்துள்ளனர்.
மேலும் அந்த சிலிண்டர்களில் ஏற்கனவே கசிவு ஏற்பட்ட நிலையில் அதனை கவனிக்காமல் இருந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த வீட்டிலிருந்த ஒரு பகுதி இடித்து விழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
-
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications