பனை விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் 'திடீர்' ட்விஸ்ட்.. வெளியான சிசிடிவி காட்சி!
தென்காசி: ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பனை விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக, குண்டடிபட்ட மணிகண்டனுடன் போலீஸ் எஸ்.ஐ இசக்கிராஜா இரு சக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் சேட் என்பவரது மகன் மணிகண்டன் (32). இவர் தனது தோட்டத்தில் கள் இறக்குவதாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு வந்த தகவலை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மற்றும் இரண்டு காவலர்கள் கடந்த 7 ஆம் தேதி மணிகண்டனின் வீட்டிற்கு சென்று இது தொடர்பாக விசாரித்துள்ளனர்.

தொடர்ந்து மணிகண்டனை அவரது தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பனை மரத்தில் கள் இருக்கிறதா என காண்பிக்கும் படி கூறியுள்ளனர். மணிகண்டன் மரத்தில் ஏறிய சமயத்தில், அவரது சகோதரர் சிவன் பொன்ராஜின் 16 வயது மகனை இசக்கி ராஜா தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் இசக்கி ராஜாவுடன் கட்டி புரண்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இசக்கி ராஜா துப்பாக்கியால் மணிகண்டனை நான்கு முறை சுட்டதில் அவரது இரண்டு கால்களிலும் குண்டுகள் துளைத்து படுகாயமடைந்தார். தொடர்ந்து மணிகண்டனை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.
இதனிடையே, மணிகண்டன் தன்னை கம்பால் தாக்கியதாகவும் தற்காப்புக்காக அவரை சுட்டதாகவும் இசக்கி ராஜா தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இசக்கி ராஜா வேண்டுமென்றே சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அதனால் ஆத்திரத்தில் மணிகண்டன் அவரை தாக்கியதாகவும், அப்போது இசக்கி ராஜா கையில் வைத்திருந்த கம்பு தவறுதலாக அவர் மீது பட்டு காயம் ஏற்பட்டதாக மணிகண்டன் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சிவன் பொன்ராஜின் 17 வயது மகள் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா உள்பட 3 காவலர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இசக்கி ராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனிடையே, சம்பவத்தன்று எஸ்.ஐ இசக்கி ராஜா மணிகண்டனை இருசக்கர வாகனத்தில் தோட்டத்துக்கு அழைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில் எஸ்.ஐ இசக்கி ராஜா மஃப்டியில் இருக்கிறார். மணிகண்டன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் நிலையில், இசக்கி ராஜா பின்னால் அமர்ந்துள்ளார். இதன் மூலம் சம்பவத்தன்று மணிகண்டன் தனது வீட்டில் இருந்துள்ளது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது. அவர், இசக்கி ராஜா சென்றபோது கள் இறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications