கேப்டன் விஜயகாந்த் முதல் தனுஷ் வரை சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்காத பிரபலங்கள்
சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பிரபல நடிகர்கள் பலரும் வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல் ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் வாக்களிக்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. பல கோடி வாக்காளர்கள் இந்த சட்டசபைத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். நடிகர்கள் ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள் காலையிலே குடும்பத்தோடு வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர். இந்த தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் மாலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழகத்திலுள்ள அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் உற்சாகமாக வாக்களித்தனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் இன்று சசிகலா வாக்களிக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஜெயலலிதா உடன் காரில் சென்று வாக்களிப்பார் சசிகலா. இந்த முறை வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் அவரால் வாக்களிக்க முடியாமல் போய் விட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இன்று வாக்களிக்கவில்லை. உடல்நலமில்லாத நிலையிலும் ஊர் ஊராக சென்று தேமுதிக வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினருக்காக வாக்கு சேகரித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை.
விஜயகாந்த், சசிகலா தவிர ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, யுவன், மணிரத்னம், வெற்றிமாறன்,கவுண்டமணி,வடிவேலு, கே.பாக்யராஜ், மோகன், கார்த்திக், பார்த்திபன், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, பிரபுதேவா, லாரன்ஸ், விஷால் ஆகியோர் வாக்களிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி, சிவா, சமுத்திரக்கனி, ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன்,லிங்குசாமி, கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் வாக்களிக்கவில்லை. தி க்ரே மேன் ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்காவில் இருப்பதால் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வாக்களிக்க வரவில்லை என தெரியவந்துள்ளது.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications