மாரிமுத்துவின் மரணத்தை ஜோதிடத்தோடு முடிச்சு போடுவதா?.. பிரபலங்களின் சவுக்கடி பதிவு
சென்னை: ஜோதிடர்கள் விட்ட சாபத்தால்தான் நடிகர் மாரிமுத்து மரணமடைந்து விட்டதாக சிலர் கூறி வரும் நிலையில் அதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஜோதிடத்தை மறுக்கும் விமரிசிக்கும் லட்சக்கணக்கான நபர்கள் பல்லாண்டு வாழ்ந்து வருகின்றனர் என்று எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மாரிமுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நவீன ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடத்தை நம்பாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய மாரிமுத்து, நான் ஜோதிடத்தை நம்ப மாட்டேன் இந்த ஜோதிடர்களாலும் ஜோதிடத்தை நம்புவர்களாலும் தான் இந்த நாடு நாசமா போகிறது என்றும் ஜோதிடர்களை ஒருமையிலும் கோபத்திலும் பேசியிருந்தார்.

தமிழா தமிழா நிகழ்ச்சியிலும் மாரிமுத்து பேசிய வார்த்தைகள் தவறு என்று பல ஜோதிடர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதில் ஒருவர் தான் மகரிஷி மந்திராச்சலம். இவர் நடிகர் மாரிமுத்துவிடம் உங்களுடைய ஜாதகத்தை தாருங்கள். நான் ஐந்து நாட்களுக்குள் உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை சொல்கிறேன் அப்படி நான் சொன்னது நடக்கவில்லை என்றால் உங்களுக்கு இரண்டு கோடி தருகிறேன் என்று சவால் விட்டார்.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில் இது ஜோதிடர்கள் கொடுத்த சாபத்தால் வந்ததா? என்று கூட பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் மரணத்தை ஜோதிடத்தோடு ஒப்பிட வேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் தங்களின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
பிரபல ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் தனது பதிவில், ஜோதிடம் வாழ வைத்துதான் பழக்கப்பட்டிருக்கிறது, பலரை மாற்றியும் திருத்தியும் இருக்கிறது, ஆனால் அழித்து பழகியதில்லை. ஜோதிடம் ஒரு ஆக்கசக்தி என்று பதிவித்துள்ளார்.
ஜோதிட ஆராய்ச்சியாளராக பலவிதங்களில் நடிகர் மாரிமுத்துவின் கருத்துகளை எதிர்த்தாலும், சக மனிதனாக இவரது நடிப்புக்கு ரசிகனாகவே இருந்திருக்கிறேன். விமர்சன கருத்துகளை கருத்துகளால் எதிர்ப்பதே தர்மம், மாறாக கருத்து சொல்பவரை அவமதிப்பதோ அல்லது இகழ்வதோ அல்ல.

இந்த சமயத்தில், இவர் ஜோதிடரை இகழ்ந்ததால், ஜோதிடர்கள் சாபம் தான் இவரது இறப்புக்கு காரணம் என கூறும் ஜோதிடர்களை வெறுக்கிறேன். முதலில் மனிதனாக நடப்போம், பின்பு ஜோதிடராக பரிணமிப்போம்.
ஜோதிடம் வாழ வைத்துதான் பழக்கப்பட்டிருக்கிறது, பலரை மாற்றியும் திருத்தியும் இருக்கிறது, ஆனால் அழித்து பழகியதில்லை. ஜோதிடம் ஒரு ஆக்கசக்தி.
நடிகர் மாரிமுத்துவின் இறப்புக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இறைமறுப்பு கொள்கை பேசினாலும், இறைவனின் நிழலில் உங்களுக்கும் இடம் கிடைக்க, பிராத்தனைகள்.
ஓம்சாந்தி !!!
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது பதிவில், ஜோதிடம் என்பது ஒரு கலை. அதில் எல்லோரும் நிபுணர்கள் இல்லை. ஜோதிடர்கள் கணிக்கும் பலன்கள் சிலருக்குப் பலிக்கிறது. சிலருக்குப் பலிப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மாரிமுத்து மரணமடைந்ததற்கு அவர் ஜோதிடத்தின் மீது நம்பிக்கையில்லாமல் கருத்து சொன்னதே காரணம் என்று சிலர் கண்டிக்க வேண்டிய கருத்துக்களைப் பரப்பிவருகிறார்கள். ஜோதிடத்தின் மீது முழுமையான நம்பிக்கை வைத்த, அதைப் படித்து அதையே தன் தொழிலாகவும் மாற்றிக்கொண்டு செயல்பட்ட என் நண்பன் பூசம் சில வருடங்கள் முன்பு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அகாலமாக இறந்தார்.

ஜோதிடத்தில் முழுமையான நம்பிக்கை வைத்து ஜாதகம் பார்த்து நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் மண மேடை காண்பதற்கு முன்பே நிறுத்தப்பட்டிருக்கின்றன. திருமணம் முடிந்த அதே நாளில் மணமகன் மரணமடைந்த சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டே.
சொந்த உதாரணம் இன்னொன்றும் சொல்கிறேன். சமீபத்தில் காலமான என் மைத்துனர் வாஸ்து சாஸ்த்திரத்தில் நம்பிக்கை கொண்டவர். வாஸ்து ஜோதிடர் ஒருவர் சொன்னபடி வீட்டின் சமையலறையை இடம் மாற்றி பல லட்சம் செலவு செய்து மீண்டும் கிரகப் பிரவேசம் செய்தார். அந்தப் புதிய வீட்டில் மூன்று மாதங்கள்தான் வாழ்ந்தார்.
ஜோதிடத்தை மறுக்கும் விமரிசிக்கும் லட்சக்கணக்கான நபர்கள் பல்லாண்டு வாழ்ந்துவருவதையும் பார்க்கிறோம்.
அவர் கருத்தையும், அவருக்கேற்பட்ட முடிவையும் முடிச்சுப் போடுவது அறிவுக்கு உகந்ததல்ல என்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,
ஜோதிடம் ஒரு கலை என்கிற பார்வை உண்டு. அது அறிவியல் என்கிறவர்களும் உண்டு. மிகச் சிலர் மூடநம்பிக்கை என்கிறவர்களும் உண்டு. அது அவர்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் வரலாம் என்று கூறியுள்ளார் சமூக ஆர்வலர் நாச்சியாள் சுகந்தி.
ஒருத்தர் இறப்பில் காரணம் தேடுவது மாதிரியான சைக்கோத்தனம் வேறெதுவுமில்லை. கடவுளை மறுத்தார்; ஜோதிடத்தை நிந்தனை. செய்தார் அதனால் தான் மத்திம வயதில் மரணம் என்று கூறும் சைக்கோக்களை என்ன செய்வது? பத்து வயதைக் கூட எட்டாத குழந்தை கேன்சரில் இறக்கிறார். BP, sugar என எல்லா பிரச்சனைகளுடனும் போராடிக்கொண்டு 90ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் ஒருவர். இதை எப்படி சொல்வது?
ஆன்மீகம் வேறு; பக்தி வேறு; மூடநம்பிக்கை சடங்கு சம்பிரதாயங்கள் வேறு. ஜோதிடம் ஒரு கலை என்கிற பார்வை உண்டு. அது அறிவியல் என்கிறவர்களும் உண்டு. மிகச் சிலர் மூடநம்பிக்கை என்கிறவர்களும் உண்டு. அது அவர்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் வரலாம். குடும்ப. போதனைகளிலிருந்தும் வரலாம். ஆனால் நம் ஆன்ம பலம் தான் நம் வாழ்க்கை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சிலர் தங்கள் ஆன்ம பலத்துக்கு ஆண்டவனை நம்புகிறார்கள். சிலர் ஒருவனுக்குக் கல்வியைக் கொடுத்தால் அது புண்ணியம். அது ஆன்ம பலத்தைத் தரும் என்று நம்பலாம். சிலர் வயிறார சோறு போடுதல் ஆன்மீகம் என்று நம்பலாம். ஆனால் இறுதியில் வாழ்க்கை கொடுக்கும் மனநிம்மதிதான் ஆன்மீகம் என்பவர்களும் உண்டு.

சினிமாக்காரர்களின் வாழ்வில் சரியான நேரத்துக்கு உறக்கம், சோறு , குடும்ப வாழ்வு என்று இருக்காது. ஆனால் ஒரு மனிதனுக்கு அமைதியைக் கொடுப்பதில் இவை மூன்றும் முக்கியம் என்கிறது அறிவியல். இவை ஒருவனுக்கு எப்படி சாத்தியம், எது கிடைக்கும் எது கிடைக்காது என்று கணிப்பது ஜோதிடம்.
ஜோதிடம் இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? உலகில் எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு நம்பிக்கை , வழிபாடு இருக்கிறது. மனித வாழ்க்கை நிச்சயமற்றது என்கிற இடத்தில் எதோ ஒரு வழிபாட்டை. நம்புகிறோம். நம்பாதவர் குறித்து எதற்கு இத்துனை விமர்சனம்?
நாத்திகவாதியின் மனைவியான என் அம்மா தீவிர கிறிஸ்துவர். கல்லறை திருநாளில் சாவேன் என்றார். நாங்கள் அவர் காமெடிக்கு பேசுகிறார் என்று நினைத்தோம். அவர் அப்படி சொன்னபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். சமையல், என் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது என எல்லா வேலைகளையும் செய்தார். கல்லறை திருநாளில் காலை 7மணிக்கு இறந்துபோனார். அவர் சொன்னது போலவே போனார். இது அவரது ஆன்ம பலத்தால் நிகழ்ந்தது என கொள்வதா? என தெரியவில்லை. இன்னும் குழப்பத்தில் தான் இருக்கிறேன். வாழ்க்கை ஒரு புதிர். நிலையாமை மட்டுமே அப்பட்டமான உண்மை. இதில் இதுதான் அதுதான் என்பது அறிவீனம்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications