அனல் பறக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. செல்போனுக்கு தடையாமே! அப்ப ஏதோ பெரிசா வெடிக்குமோ
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அரங்கத்தினுள் செல்போன்களை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக- பாஜக இடையே கூட்டணி குறித்த பிரச்சினை எழுந்து வருகிறது. அதிமுகவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற குற்றவாளி என அவருடைய பெயரை சொல்லாமல் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு அதிமுகவினர் கொந்தளித்தனர். இதனால் பாஜகவுடன் கூட்டணி வேண்டுமா என யோசனைக்கு சென்றனர்.
இந்த நிலையில் அண்மையில் என் மண் என் மக்கள் எனும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் அண்ணாதுரை, மீனாட்சி அம்மனை தவறாக பேசியதற்காக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டதாக அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு அதிமுகவினர் கண்டித்தனர். வரலாற்றில் நடைபெறாத ஒன்றை அண்ணாமலை கூறியதாக கண்டனங்கள் எழுந்தன.
அது போல் இதற்கு ஆதாரமே கிடையாது. தவறான கருத்து என நடுநிலையாளர்கள் கூறி வந்தனர். இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அதிமுகனர், கொந்தளித்து போய்விட்டனர். மேலும் அதிமுக பாஜக இடையே கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இது கட்சியின் முடிவு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்தான் செல்லூர் ராஜுவோ அதிமுக- பாஜக கூட்டணியில் பிரச்சினையே இல்லை என்றார். அது போல் அண்ணாமலையும் செல்லூர் ராஜு கூறிய கருத்தையே கூறியிருந்தார். இந்த நிலையில் டெல்லியில் பாஜக தலைமையை அதிமுக நிர்வாகிகள் சந்தித்ததாக தெரிகிறது.
நேற்றைய தினம் ஜெயக்குமார் மீண்டும் பாஜக - அதிமுக இடையே கூட்டணி என்பதில் தான் தெரிவித்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் அதிமுக பாஜக கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. அது போல் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு செல்லும் நிர்வாகிகளின் செல்போன் முகப்பிலேயே வாங்கி வைத்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications