Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகப் பொருளாதாரம் ஒரு பக்கம் தள்ளாட்டத்தில் இருக்க, மறுபக்கம் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஒரு விஷயத்தில் மட்டும் செம தெளிவாக இருக்கின்றன. அது-தங்கம் வாங்குவது!

சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் மற்றும் 'டாலர்' ஆதிக்கத்தைக் குறைக்க நாடுகள் எடுக்கும் முயற்சிகளால், வரும் காலங்களில் தங்கத்திற்கான மார்ஜின் எகிறப்போவதாக உலக தங்க கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது.

buying gold

திடீர் 'என்ட்ரி' கொடுக்கும் புதிய நாடுகள்!

இதுவரை அமைதியாக இருந்த பல நாடுகள் இப்போது திடீரென தங்கத்தை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளன. இது குறித்து உலக தங்க கவுன்சிலின் அதிகாரி ஷாகாய் ஃபான் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக ஒரு சுவாரஸ்யமான மாற்றம் நடக்கிறது. நீண்ட காலமாக தங்கம் வாங்காமல் இருந்த அல்லது இதுவரை தங்கச் சந்தைக்கே வராத மத்திய வங்கிகள் கூட இப்போது போட்டிப் போட்டுக் கொண்டு முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன," எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குவாத்தமாலா, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள், நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமீபத்தில் பெரிய அளவில் தங்கத்தை வாங்கியுள்ளன.

ஏன் இந்த ஆர்வம்?

டாலர் மீதான பயம்: அமெரிக்க டாலரின் பிடியிலிருந்து தற்காத்துக்கொள்ள (De-dollarization), பல நாடுகள் தங்களது கையிருப்பில் தங்கத்தின் அளவை உயர்த்தி வருகின்றன.

பதற்றமான சூழல்: உலகப் போர் அச்சம், பிராந்திய மோதல்கள் போன்ற இக்கட்டான காலங்களில் கை கொடுக்கும் ஒரே 'சேஃப் ஹேவன்' (Safe Haven) தங்கம்தான் என்பது உலக நாடுகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பொருளாதாரப் பாதுகாப்பு: மற்ற கரன்சிகளின் மதிப்பு சரிந்தாலும், தங்கத்தின் மதிப்பு எப்போதும் கைகொடுக்கும் என்பதால், மத்திய வங்கிகள் இந்த ரூட்டை கையில் எடுத்துள்ளன.

2026-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி அதிக தங்கம் வைத்துள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல்,

அமெரிக்கா: 8,133.5 டன்கள் - உலகின் மிகப்பெரிய தங்கம் இருப்பைக் கொண்டுள்ள நாடு.

ஜெர்மனி: 3,350.3 டன்கள் - ஐரோப்பாவின் முதன்மையான தங்கம் சேமிப்பாளராகத் திகழ்கிறது.

இத்தாலி: 2,451.8 டன்கள் - பல தசாப்தங்களாகத் தனது தங்கம் இருப்பை நிலையாகத் தக்கவைத்துள்ளது.

பிரான்ஸ்: 2,437.0 டன்கள் - பொருளாதாரப் பாதுகாப்பிற்காகப் பெரும் பகுதியைத் தங்கமாக வைத்துள்ளது.

ரஷ்யா: 2,327.0 டன்கள் - சமீபத்திய ஆண்டுகளில் டாலர் பயன்பாட்டைக் குறைக்கத் தங்கத்தை அதிகமாகக் குவித்து வருகிறது.

சீனா: 2,306.0 டன்கள் - சர்வதேசச் சந்தையில் தங்கத்தை வாங்குவதில் முன்னணியில் உள்ளது.

சுவிட்சர்லாந்து: 1,040.0 டன்கள் - தனது நாட்டின் பொருளாதார நிலையை உறுதிப்படுத்தத் தங்கம் வைத்துள்ள முக்கிய நாடு.

இந்தியா: 880.0 டன்கள் - இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த சில மாதங்களாகத் தங்கம் வாங்குவதைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜப்பான்: 846.0 டன்கள் - தனது அன்னியச் செலாவணி இருப்பில் ஒரு முக்கியப் பங்காகத் தங்கத்தை வைத்துள்ளது.

துருக்கி / நெதர்லாந்து: 614.0 டன்கள் - சமீபத்திய நிலவரப்படி துருக்கி 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. (இருப்பினும் துருக்கி மற்றும் நெதர்லாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது).

கடந்த காலங்களில் பெரிய நாடுகள் மட்டுமே தங்கத்தை ஒரு முக்கிய முதலீடாகக் கருதின. ஆனால், 2026-ன் தற்போதைய சூழலில் சிறிய நாடுகளும் தங்களது பொருளாதாரப் பாதுகாப்புக்காக தங்கத்தை நோக்கித் திரும்புவது, உலக வர்த்தகத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+