Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்.. சம்பளம் எவ்வளவு உயருகிறது தெரியுமா? ஜூலை நெருங்குதே.. இவ்வளவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.. ஜூலை மாதம் நெருங்கி வரும் நிலையில், இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழக்கமாக வழங்கப்பட வேண்டும்... ஆனால், கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலேயே இருந்தது.

Central government employees dearness allowance hike and How much of a raise are employees going to get on July

அதிரடி: எனவேதான், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.. அதன்படியே, 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதன்படி தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.4.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இதனால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடிகள் செலவினம் ஏற்படும். எனினும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலம் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்" என்று அரசு தெரிவித்திருந்தது.

அரசு ஊழியர்கள்: இவ்வாறாக, தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது, அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இதனால், அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் அகவிலைப்படி ரூ.10,710 உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இப்போதைய அறிவிப்பின்படி 4% அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.25,500 என்றால், ஊழியரின் அகவிலைப்படி 10,710 ஆக உயரக்கூடும்.. அதாவது, ஊழியருக்கு ரூ.1,020 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோலவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை இந்த அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும்.. இந்த ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு ஏற்கனவே ஒரு முறை அறிவித்துள்ள நிலையில், இப்போது ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு மீண்டும் ஒருமுறை வெளியாக உள்ளது..

Central government employees dearness allowance hike and How much of a raise are employees going to get on July

ஜூலை மாதம்: இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை மாதம் விரைவில் தொடங்க இருப்பதால் மறுபடியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது.

இந்த அகவிலைப்படி உயர்வு, விலைவாசி ஏற்றத்தை குறிக்கும் பணவீக்க விகிதத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் குறைந்து கொண்டு வருகிறது. எனவே, ஜூலை மாதம் ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால், அகவிலைப்படியானது 45 சதவீதமாக உயரும் என்று தெரிகிறது.. அதனால் ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியமும் உயரக்கூடும்..

அகவிலைப்படி: அதுமட்டுமல்ல, அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+