Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. சம்பளம் உயர்கிறது.. எவ்வளவு தெரியுமா? நெருங்கும் ஜூலை.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.. ஜூலை மாதம் நெருங்கி வரும்நிலையில், இதுகுறித்து தகவல் ஒன்ற வெளியாகி மகிழ்ச்சியை தந்துவருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழக்கமாக வழங்கப்பட வேண்டும்... ஆனால், கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வினை வழங்கப்படாமலேயே இருந்தது.

Central government employees dearness allowance hike and salary hike for central government employees

அதிரடி: இந்நிலையில், 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது, அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இதனால், அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் அகவிலைப்படி ரூ.10,710 உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இப்போதைய அறிவிப்பின்படி 4% அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.25,500 என்றால், ஊழியரின் அகவிலைப்படி 10,710 ஆக உயரக்கூடும்.. அதாவது, ஊழியருக்கு ரூ.1,020 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோலவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை இந்த அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும்.. இந்த ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு ஏற்கனவே ஒரு முறை அறிவித்துள்ள நிலையில், இப்போது ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு மீண்டும் ஒருமுறை வெளியாக உள்ளது..

ஜூலை மாதம்: இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை மாதம் விரைவில் தொடங்க இருப்பதால் மறுபடியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது.

இந்த அகவிலைப்படி உயர்வு, விலைவாசி ஏற்றத்தை குறிக்கும் பணவீக்க விகிதத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் குறைந்து கொண்டு வருகிறது. எனவே, ஜூலை மாதம் ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால், அகவிலைப்படியானது 45 சதவீதமாக உயரும் என்று தெரிகிறது.. அதனால் ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியமும் உயரக்கூடும்..

அதாவது, இந்த மாதத்தில் மட்டுமே ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை 0.72 சதவீதம் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயமாக 3 முதல் 4 சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் மொத்த அகவிலைப்படி உயர்வு 46 சதவீதமாக அதிகரிக்கும்.

அகவிலைப்படி: இந்த அகவிலைப்படி உயர்வினால் கிட்டத்தட்ட 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 69.76 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமல்ல, அகவிலைப்படி 4% உயர்வு வழங்கினால் ஊழியரின் மாதாந்திர சம்பளம் ரூ.42,000 மற்றும் அடிப்படை ஊதியம் ரூ.25,500 ஆக இருப்பின் மாத சம்பளம் ரூ.10,710 ஆக உயரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போல ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 அடிப்படை ஓய்வூதியம் வழங்கப்பட்டால் அகவிலைப்படி உயர்வின்படி ரூ.12,600 ஆக உயரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+