களத்துல இறங்கிற வேண்டியது தான்.. 50 லட்சத்தை அள்ளித் தரும் அரசு! NLM மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு 'தேசிய கால்நடை இயக்கம்' (National Livestock Mission - NLM) என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆடு, செம்மறியாடு, நாட்டுக்கோழி, வெள்ளாடு போன்ற கால்நடைகளை வளர்க்க சிறு, நடுத்தர அளவிலான பண்ணைகள் அமைக்க விரும்பும் நபர்களுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
கால்நடை வளர்ப்பு தொழில் தமிழகத்தின் பல கிராமப்புற குடும்பங்களுக்கும் ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக மாறியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, இளைஞர்களையும் விவசாயிகளையும் தொழில்முனைவோராக உருவாக்கும் நோக்கில் இந்த மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

திட்டத்தின் செயல்பாடு முழுவதும் 'உத்யமி மித்ரா' (Udyami Mitra) என்ற இணையதளம் மூலமாக நடைபெறுகிறது.இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், கால்நடை உற்பத்தியை அதிகரித்து, நாட்டின் இறைச்சி மற்றும் முட்டை தேவையை பூர்த்தி செய்வதோடு, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.
தேசிய கால்நடை இயக்கம்
நாட்டுக்கோழி வளர்ப்பு, குஞ்சு பொரிப்பகம், செம்மறியாடு வளர்ப்பு போன்ற தொழில்கள் இதில் அடங்கும். கோழிப் பண்ணை அமைக்க விரும்புவோருக்கு மத்திய அரசு 50 சதவீத மானியத்தை வழங்குகிறது. ஒரு திட்டத்தின் மதிப்பீட்டில் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். அதேபோல், ஆடு அல்லது வெள்ளாடு பண்ணை அமைக்கும் நபர்களுக்கு திட்டத்தின் மதிப்பீட்டில் 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். சுமார் 100 பெண் ஆடுகளைக் கொண்ட பண்ணைக்குச் சுமார் ரூ.20 லட்சம் வரை மானியம் பெறலாம்.
உத்யமி மித்ரா தளம்
இந்த மானியம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும். திட்டத்தைச் செயல்படுத்த விரும்புவோர், தங்கள் பண்ணைக்கான விரிவான திட்ட அறிக்கையுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் nlm.udyamimitra.in என்ற இணையதளத்தில் பெற முடியும். மேலும், திட்ட அறிக்கைக்கான மாதிரி மென்பொருள் www.tnlda.tn.gov.in தளத்தில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.
கால்நடை துறை
இத்திட்டத்தில் தனிநபர்கள் மட்டுமன்றி சுயஉதவிக் குழுக்கள் (SHG), விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்புச் சங்கங்கள் மற்றும் பிரிவு-8 நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். திட்டத்திற்காக நில உரிமை ஆவணங்கள், அடையாளச் சான்றுகள், வங்கிக் கணக்கு விவரங்கள், மற்றும் விரிவான திட்ட அறிக்கை ஆகியவை தேவையாகும். வங்கிக் கடன் மூலம் நிதி பெறுவோருக்கு, அதற்கான ஒப்புதல் கடிதமும் இணைக்கப்பட வேண்டும்.
விவசாயிகள் மற்றும் இளைஞர்கள்
விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ அலுவலகத்தையும், மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்களையும் அணுகி கூடுதல் தகவல்களைப் பெறலாம். திண்டுக்கல் மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில், இந்தத் திட்டம் ஏற்கனவே விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக விவசாயிகள்
மொத்தத்தில், இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் வாழும் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள், ஆடு அல்லது கோழி வளர்ப்பைத் தொடங்க விரும்பினால், இந்த மானியத் திட்டம் மூலம் ஒரு நிலையான வருமானத்தை உருவாக்கி, தங்களது வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்தை அடையலாம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது திறந்து உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் விரைவில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications