பார்வையற்றோரும் இனி திருக்குறள் படிக்கலாம்! 46 நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கம்! புதிய முயற்சி!
சென்னை: பார்வையற்றோரும் இனி திருக்குறள் படிக்கும் வகையில் 46 நூல்களை பிரெய்லி வடிவில் உருவாக்கியுள்ளது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்.
கடந்த மார்ச்சில் தொடங்கப்பட்ட இப்பணிகள் வரும் டிசம்பரில் முடிவடைய உள்ளதால் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக பிரெய்லி நூல்கள் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;

செம்மொழி நிறுவனம்
''தமிழ் செவ்விலக்கியங்களின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கில் மொழிபெயர்ப்புகள், ஆய்வு நூல்கள் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் செவ்விலக்கிய நூல்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டங்களை செம்மொழி நிறுவனம் தற்போது மேற்கொண்டுள்ளது.''

பிரெய்லி நூல்
''இதுதவிர, இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் செவ்வியல் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுதல், கி.பி.6-ம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டியல், தொல்லியல் துறைகளில் ஆய்வு மேற்கொள்ளுதல், செவ்வியல் நூல்களின் சிறப்புகளை யூ-டியூப் மூலம் பரப்புதல் போன்ற திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றன. இதைத் தொடர்ந்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி நூல் பதிப்புதிட்டமும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.''

பார்வையற்றோர்
''அதன்படி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், நன்னூல், தொல்காப்பியம், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இதில் 41 நூல்கள் செவ்வியல் நூல்கள் ஆகும்.''

எளிய வடிவில் வடிவமைப்பு
''இவை அனைத்தும் எளிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச்சில் தொடங்கப்பட்ட இப்பணிகள் வரும் டிசம்பரில் முடிவடையும். பின்னர் நூல்கள் அச்சிடப்பட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.'' இவ்வாறு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications