"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாகவும், பிரச்சனைகள் இன்றி நடத்தி முடிக்கவும் தேர்தல் ஆணையம் அதிரடியாக 327 தேர்தல் பார்வையாளர்களை தமிழகத்திற்கு இன்று நியமனம் செய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்துக்கு ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
327 பார்வையாளர்கள்
இந்நிலையில் தான் இன்று தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்துக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,பொது பார்வையாளர்களாக (General Observers) 136 பேர், காவல் பார்வையாளர்களாக (Police Observers) 40 பேர், செலவு பார்வையாளர்களாக (Expenditure Observers) 151 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 327 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாளை (மார்ச் 18) முதல் பணியை தொடங்க உள்ளனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டசபை தொகுதிகளில் இவர்கள் பணி செய்ய உள்ளனர். அதேபோல் தமிழகம் மட்டுமின்றி தேர்தல் நடைபெற உள்ள கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட இடங்களுக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியை எடுத்து கொண்டால் அங்குள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுபார்வையாளர்கள், 4 காவல் பார்வையாளர்கள், 17 செலவு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடக்கும் 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்று மொத்தம் 1111 பேர் மத்திய பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் நியமனம் என்பது வாக்காளர்களுக்கும் பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பது, வேட்பாளர்களின் செலவு கணக்குகளைகண்காணிப்பது உள்ளிட்டவையாகும். தற்போது தமிழகம், புதுச்சேரி உள்பட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து தேர்தல் ஆணையம் பிடியை இறுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications