Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்வி நிதி” - மத்திய கல்வி அமைச்சர் கறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கறாராக கூறியிருக்கிறார்.

சென்னை ஐஐடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த தர்மேந்திர பிரதான் செய்தியாளை சந்தித்தார். அப்போது கல்வி நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சர், "சமக்ர சிக்சா அபியான் விவகாரத்தில் மத்திய அரசனுடனான புரிந்துணர்வு அடிப்படையிலேயே நிதி வழங்க முடியும்" என்று கூறியிருக்கிறார்.

Tamil Nadu educational Union Minister

6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வியை வழங்க கொண்டுவரப்பட்டதுதான் சமக்ர சிக்சா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டம். கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு மாநில அரசு 40 சதவீதமும், மத்திய அரசு 60 சதவீதமும் நிதியை கொடுக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டுக்கான நிதியை சுமார் ரூ.2,152 கோடியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இதனால் கல்வி உரிமைச் சட்டம் 2009 கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நிதி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் 43,94,906 மாணவர்கள் 2,21,817 ஆசிரியர்கள் மற்றும் 32,701 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டு வருகிறது. ஆனால், புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி வழிக்கல்வி இடம் பெற்று இருப்பதால் தமிழ்நாடு அரசு இதனை ஏற்க மறுக்கிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வி அமைச்சர், "பள்ளிக்கல்வி சார்ந்த நிதிகளை நிறுத்தாமல் மத்திய அரசு தொடர்ந்து கொடுத்து வருகிறது. குறிப்பாக மதிய உணவு திட்டத்திற்கான நிதி, வயது வந்தோர் கல்விக்கான நிதியையும் மத்திய அரசு நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கி வருகிறது.

ஆனால், எஸ்எஸ்ஏ நிதி என்பது மத்திய அரசின் உடனான புரிந்துணர்வு அடிப்படையில்தான் வழங்க முடியும். மும்மொழி கொள்கை என்று கூறி தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை மாணவர்கள் மீது திமுக அரசு திணித்து வருகிறது. தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய மொழி சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் சொல்லித் தரப்படுகின்றன. மற்ற பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே சொல்லித் தரப்படுகிறது.

அந்த வகையில் நாங்கள் எந்த மொழியையும், எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கவில்லை. மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+