வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு.. மத்திய அரசு உத்தரவு
சென்னை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இதுவரை 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது பாதுகாப்பை 'ஒய்' பிரிவில் இருந்து 'இசட்' பிரிவுக்கு மேம்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஜெய்சங்கருக்கு 68 வயது ஆகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், ரஷ்யா, சிங்கப்பூர், ஜப்பான்,அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இந்திய தூதராக இருந்தார். இந்திய வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.பல்வேறு மொழிகளை பேசக்கூடியவர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றான வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் இருக்கிறார். இவருக்கு இதுவரை 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதை டெல்லி போலீஸார் அளித்து வந்தார்கள். இந்நிலையில் அவரது பாதுகாப்பு 'இசட்'பிரிவுக்கு மேம்படுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்காரணமாக ஜெய்சங்கரின் பாதுகாப்பை டெல்லி போலீஸாரிடம் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) ஏற்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த இசட் பிரிவு பாதுகாப்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ,இந்தியாவில் எங்கு சென்றாலும், சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 14 முதல் 15 வீரர்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள்.
நாட்டில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்பட நாட்டில் 176பேருக்கு துணை ராணுவப்படையின் விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications