சென்னை மடிப்பாக்கத்தில் அலறிய ஐடி பெண் ஊழியர்... ஹெல்மெட் அணிந்தபடி வந்தவர் அட்டூழியம்.. சிசிடிவி
சென்னை: சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் சாலையில் நடந்து சென்ற ஐடி நிறுவன பெண் ஊழியரை தாக்கி ஹெல்மட் அணிந்து வந்த இளைஞன், நகை பறிக்க முயன்ற பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
தலைகவசம் என்பது நம்மை சாலையில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாக்க பயன்படுகிறது. தலையில் அடிப்பட்டால் உயிரிழக்கக்கூடாது என்பதற்காக தலைகவசம் அணிகிறோம். ஆனால் சில திருடர்கள், தாங்கள் யார் என்பதை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக தலை கவசம் அணிகிறார்கள்.

அப்படி அணிந்து அவர்கள், சாலைகளில் செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபடுகிறார்கள். அப்படியான நகை பறிப்பின் போது, பெண்கள் படுகாயம் அடைவதுடன், சிலசமயங்களில் மரணம் கூட ஏற்படுகிறது. அடிக்கடி செயின்பறிப்பு கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகரில் டிசம்பர் 13ம் தேதி புதன்கிழமை அன்று இரவு 7 மணி அளவில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அந்த சாலையில் அப்போது யாருமே இல்லை.. திடீரென இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்த இரண்டு பேர் அந்த வழியாக வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த நபர், கீழே இறங்கி வந்து அந்த ஐடி பெண் ஊழியரின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார்.
இதனால் அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் முயற்சித்தார். ஆனால் விடாத திருடன் நகை பறிக்க தீவிரமாக இறங்கி, அந்த பெண்ணை தள்ளிவிட்டு கழுத்தில் கிடந்த நகையை இழுத்தார். வரவில்லை.. இதனிடயே அந்த பெண் ஆவேசமாக அலறி கத்தி கூச்சலிட்டார்.
Wearing a helmet and mask is essential for safety, but it's crucial to be vigilant. Ensure you secure them properly when not in use to prevent theft or damage.#Madipakkam @BJPMadipakkam@tnpoliceoffl pic.twitter.com/2kFhuGWhwP
— Sai Sashhh🙏🇮🇳👩💼 (@Jaimodisarkar) December 14, 2023
இதனால் உஷாரான கொள்ளையன் அங்கிருந்து ஓடி இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றான். இந்த கொள்ளை முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் நடந்த நகை பறிப்பு முயற்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மட்டுமல்ல, தமிழகத்தில் விழுப்புரம், தூத்துக்குடி உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. தலைகவசம் அணிந்து வந்து கொள்ளையர்கள் இதுபோன்ற செயல்களை அடிக்கடி செய்வது குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications