கம்முன்னு வந்த ஹாமூன் புயல்.. நாளை கரையை கடக்கிறது! 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது
சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஹாமூன் புயல் நாளை கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நேற்று (23-10-2023) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை 5.30 மணி அளவில் ஹாமூன் புயலாக வலுப்பெற்று, இன்று (24-10-2023) காலை 02.30 மணி அளவில் தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை 08.30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவுகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை கெபுபரா (Khepupara) மற்றும் சிட்டகாங் (Chittagong) இடையே 25 ஆம் தேதி மாலை கரையை கடக்கக்கூடும்.

நேற்று (23-10-2023) மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர 'தேஜ்' புயல் இன்று (24-10-2023) காலை 02.30-03.30 மணி அளவில் தெற்கு அல்-கைதா (Al-ghaidah)க்கு மிக அருகில் ஏமன் கடற்கரையை கடந்தது.
தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25.10.2023: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26.10.2023 முதல் 28.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29.10.2023 மற்றும் 30.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): வத்திராயிருப்பு (விருதுநகர்) 10, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 7, கருப்பாநதி அணை (தென்காசி), அடையாமடை (கன்னியாகுமரி) தலா 6, ராஜபாளையம் (விருதுநகர்) 5, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), சுருளகோடு (கன்னியாகுமரி) தலா 4, சிற்றாறு (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), அடவினனார்கோயில் அணை (தென்காசி), தக்கலை (கன்னியாகுமரி), உசிலம்பட்டி (மதுரை) தலா 3, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), தேக்கடி (தேனி), சிவலோகம் (கன்னியாகுமரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நாகர்கோயில் (கன்னியாகுமரி), பெரியாறு (தேனி), கூடலூர் (தேனி), உத்தமபாளையம் (தேனி), திருமயம் (புதுக்கோட்டை), தேவகோட்டை (சிவகங்கை), குழித்துறை (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), சண்முகாநதி (தேனி) தலா 2, பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), இளையங்குடி (சிவகங்கை), வீரபாண்டி (தேனி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), திருவண்ணாமலை, முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), வம்பன் Kvk AWS (புதுக்கோட்டை), மானாமதுரை (சிவகங்கை), சாத்தியார் (மதுரை), முக்கடல் அணை (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி) தலா 1."
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications