சூளும் கரு மேகங்கள்.. 3 மாவட்டங்களை சுத்துப்போடும் மழை! அப்டேட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்யும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டும் தென்னிந்தியாவில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வன விலங்குகள் மட்டுமின்றி மக்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தென்னிந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் கடலோர ஒடிசாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு தொடங்கிய பருவமழை, இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்திருக்கிறது.
பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தற்போது கூறியுள்ளது.
அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இரவு 7 மணிக்கு மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இம்மாவட்ட மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
இருப்பினும் தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று வானிலை மையம் கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications