"தங்கம் விலை ரூ. 9200க்கு கூட சரியும்! ஆனால்.." அடுத்த வரியே பெரிய இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருவதால் அதை வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை உயர்வதை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், அது குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா.. அப்படியே குறைந்தாலும் அது எந்தளவுக்குக் குறையும் என்பதை விளக்கியுள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.

தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடியாக எடுக்கும் முடிவுகள், புவிசார் அரசியல் ஆகியவையே இதற்குப் பிரதான காரணமாக இருக்கிறது. இன்று தங்கம் விலை லேசாக குறைந்தாலும் இன்னுமே அதிகமாகவே இருக்கிறது. இன்றும் கூட ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.10,200க்கு மேல் இருக்கிறது. இதனால் தங்கம் விலை எப்போது தான் குறையும் என்றே பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Anand Srinivasan gold personal finance

ஆனந்த் சீனிவாசன்

இதற்கிடையே தங்கம் விலை ரூ.9200 வரை கூடப் போகலாம் எனச் சொல்கிறார் ஆனந்த் சீனிவாசன். இதைக் கேட்டவுடன் நமக்குக் குஷியாக இருக்கும். ஆனால், இதை சொன்னவுடன் அடுத்த வரியே ஒரு பெரிய இடியை அவர் இறங்கியுள்ளார். இது குறித்து ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை குறையுமா எனக் கேட்கிறீர்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.

முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க விற்றால் ஒரு ரூ.200- ரூ.300 குறையலாம். 700 ரூபாய் கூட சரியலாம். இருப்பினும், அதையெல்லாம் பெரிதாகப் பார்க்கக்கூடாது. ரூ.9,500ஐ ஒரு பேஸ் போல எடுத்துக் கொள்ளலாம். அதைத் தாண்டி குறைவது கஷ்டம்.. தங்கம் விலை அடுத்த சில காலம் ரூ.9500 முதல் ரூ.10,200 என்ற ரேஞ்சில் இருக்கும்.

சேமிப்பு

தங்கம் விலை இந்தளவுக்கு ஏறிவிட்டது. எனக்கு சம்பளம் குறைவு அதனால் சேமிக்க முடியவில்லை என்றெல்லாம் கதை சொல்லக்கூடாது. எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் நிச்சயம் சேமிக்கலாம். சும்மா சம்பளம் கம்மி.. சேமிக்க முடியாது எனச் சொல்லக்கூடாது. தேவையற்ற செலவுகளைக் குறைத்தால் நிச்சயம் சேமிக்கலாம். எனவே, சேமிக்க வழியில்லை எனச் சொல்லக்கூடாது. எவ்வளவு செலவு இருந்தாலும் அதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டாலே போதும், பணத்தைச் சேமிக்கலாம்.

10 ஆண்டுகளுக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.2500 ரேஞ்சில் இருந்தது. நான் அப்போதே தங்கம் விலை ரூ.10,000க்கு போகும் எனச் சொன்னேன். அப்போது நான் சொன்ன போது எல்லாரும் அந்தளவுக்கு எல்லாம் உயராது என்றே சொன்னார்கள். ஆனால், இப்போதே தங்கம் விலை ரூ.10,000க்கு போய்விட்டது.

ரூ.9200க்கு போகும்

இப்போது தங்கம் விலை குறையுமா எனக் கேட்கிறீர்கள். குறுகிய காலத்தில் தங்கம் விலை ஓரளவுக்குக் குறையலாம். ஒரு 7 முதல் 8% வரை குறையலாம். ரூ.10,200ல் இருக்கும் தங்கம் விலை ரூ.9500க்கு போகலாம்.. ரூ.9200க்கு கூடப் போகலாம்.! ஆனால், இதற்காகத் தங்கம் விலை ரூ.9200க்கு நிச்சயம் போகும் என நான் சொல்லவில்லை. போக வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்கிறேன்.

ஆனால், தங்கம் விலை இங்கிருந்து 15% வரை உயரலாம். அந்தளவுக்குத் தங்கம் விலை உயர வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு 500 டாலர் தங்கம் விலை ஏறினாலே போதும். இப்போது கோல்ட் ப்யூச்சர்ஸ் அமெரிக்காவில் 3685 டாலராக இருக்கிறது. அது 4100 முதல் 4200 டாலர் வரை போக வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி ஒரு முறை வட்டியைக் குறைத்தாலே 5% வரை தங்கம் விலை உயரும். வரும் காலத்தில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறைந்தால் நிச்சயம் தங்கம் விலை உயரும்.

வாய்ப்பு இருக்கா?

அமெரிக்காவில் நிலவும் சூழல், இன்னொரு பக்கம் ரஷ்யா மோதல் என எல்லா பக்கமும் தங்கம் ஏறவே வாய்ப்புகள் அதிகம்.. 10 முதல் 15% வரை உயரத் தங்கம் விலை உயர வாய்ப்புகள் அதிகம். அதாவது ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,500 போய்விடும். செய்கூலி, சேதாரம் சேர்த்தால் ரூ.14000 கிட்ட போய்விடும். அங்கிருந்து 40% குறைந்தால் மட்டுமே ரூ.10,000க்கு வரும். அந்தளவுக்குக் குறையுமா என்றால் குறையாது" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+