அமைச்சருடன் நெருங்கி பழகியது.. நான் செய்த முட்டாள்தனம்.. மருத்துவருடன் சாந்தினி பேசிய ஆடியோ ரிலீஸ்
சென்னை: அமைச்சருடன் நான் நெருங்கி பழகியதுதான் நான் செய்த முட்டாள்தனம் என மணிகண்டனின் நண்பரான டாக்டரிடம் சாந்தினி கதறிய ஆடியோ வெளியாகியுள்ளது.
நாடோடிகள் படத்தில் நடித்தவர் சாந்தினி. இவர் மலேசிய நாட்டை சேர்ந்தவர். இவர் மலேசிய சுற்றுலாத் துறையில் அரசு பதவி வகித்து வருகிறார். இவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டு தன்னை கர்ப்பமாக்கி 3 முறை கருகலைப்பு செய்துள்ளார் என சாந்தினி புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டனோ சாந்தினி யாரென்றே தெரியாது என தெரிவித்துள்ளார். மணிகண்டனுக்கு ஆதரவாக அவரது மனைவி, சாந்தினி மீது அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோபாலபுரம்
இந்த நிலையில் நடிகை சாந்தினியும் கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரும் கருக்கலைப்பு தொடர்பாக பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இவை அதிமுக ஆட்சியில் இருந்த போது அவர் பேசியுள்ளார். இதில் மணிகண்டன் செய்த விவகாரத்தால் தனது வயிற்றுப்பகுதியில் கருப்பாக இருக்கிறது. இது என்ன என எனது அம்மா கேட்கிறார், நான் என்ன பதில் சொல்வது, எனக்கு செய்த கர்மவினைதான் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்கிறார்.

முதல்வரிடம் புகார்
நான் எத்தனை முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது உங்களுக்குத்தான் தெரியும். நீங்கள் தான் எனக்கு கருக்கலைப்பு செய்தீர்கள். நான் தொடர்பு கொண்டாலும் மணிகண்டன் போனை எடுப்பதில்லை. என்னை அவாய்ட் செய்கிறார். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை முதல்வரிடம் (எடப்பாடி பழனிச்சாமி) காண்பித்தால் மணிகண்டன் நிலை என்னவாகும்?

கருக்கலைப்பு
மணிகண்டன் என்னை எத்தனையோ முறை டார்ச்சர் செய்தும் கருக்கலைப்பு செய்தும் நான் அதை யாரிடமும் புகாராக சொன்னதே இல்லை. நான் மலேசியாவில் முக்கிய புள்ளியாக இருக்கிறேன். எனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இந்த பிரச்சினையை நான் முதல்வரிடம் (முன்னாள்) எடுத்துச் செல்ல முடியும்.
Recommended Video

மக்களுக்கு
அவரிடம் போய் சொல்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை. பழகிய எனக்கும் எதையும் செய்யவில்லை, அவரது தொகுதி மக்களுக்கும் மணிகண்டன் எதுவும் செய்யாததால்தான் அவரது பதவி பறிக்கப்பட்டது. நான் அரசின் நேரடித் தொடர்பில் இருந்ததால் அவருக்கு பதவி பறிபோக இருந்தது எனக்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பே தெரியும் என சாந்தினி பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications