அந்த பதவிக்கு வரப்போவது யார்? நாடே உற்று நோக்கும் நியமனம்! நாயுடு, நிதிஷ் ஆடும் கேம்! அப்போ நிர்மலா?
சென்னை: மத்தியில் பாஜக கட்சி மைனாரிட்டி ஆட்சி அமைத்து இருக்கும் நிலையில் முக்கியமான பதவி ஒன்றிற்கான எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது .
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு அமலாக்க இயக்குநரகம், இந்திய அரசின் கூடுதல் செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் தலைமையில் இயங்குகிறது. இந்த இயக்குநருக்கு சிறப்பு இயக்குநர்கள், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் அமலாக்க அதிகாரிகள் உதவிகளை செய்வார்கள். மும்பை, சென்னை, சண்டிகர், கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் சிறப்பு இயக்குநர்கள் தலைமையில் ஐந்து மண்டல அலுவலகங்கள் உள்ளன.

இயக்குனரகத்தின் மண்டல அலுவலகங்கள் புனே, பெங்களூரு, சண்டிகர், சென்னை, கொச்சி, டெல்லி, பனாஜி, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜலந்தர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, பாட்னா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் உள்ளன. இவை கூட்டு இயக்குனரின் தலைமையில் செயல்படுகின்றன.
இயக்குனரகத்திற்கு துணை மண்டல அலுவலகங்கள் மங்களூரு, புவனேஷ்வர், கோழிக்கோடு, இந்தூர், மதுரை, நாக்பூர், அலகாபாத், ராய்ப்பூர், டேராடூன், ராஞ்சி, சூரத், சிம்லா, விசாகப்பட்டினம் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் உள்ளன.
ராகுல் நவீன்: ராகுல் நவீன் என்பவர் இதன் இயக்குனராக உள்ளார். இவரை நியமனம் செய்வது அதன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது உள்துறை பொறுப்பு. இந்த நிலையில்தான் புதிய இயக்குனருக்கான நியமனத்தில் தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ் குமார் ஆகியோர் தலையிட்டு வருகிறார்களாம்.
அமலாக்கத்துறை இயக்குனர் நியமனத்தில் தங்களின் வாய்ஸ் இருக்க வேண்டும் என்று நாயுடு, நிதிஷ் இருவரும் தீவிரமாக முயன்று வருகிறார்களாம்.
முயற்சி: இது போக சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். லோக்சபா சபாநாயகர் பதவியை தேர்வு செய்வது கடினமானது. சபாநாயகர் பதவி கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். அதே சமயம் மைனாரிட்டி அரசு அமையும் போது, கூட்டணி ஆட்சியின் போது ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் அபாயம் உள்ளது.
முக்கியமாக நம்பிக்கையில்லா தீர்மானம், குதிரை பேரம், எம்பிக்கள் தகுதி நீக்கம் போன்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சபாநாயகர் பதவி முக்கியமானதாக மாறும்.
நாயுடு திட்டம்: இப்படிப்பட்ட நிலையில்தான் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இரண்டு பேருமே "சபாநாயகர்" பதவியை தங்களுக்கான "இன்சூரன்ஸ்" ஆக பார்க்கின்றனர்.
கடந்த 10 வருடங்களில் பாஜக பல அரசுகளை கவிழ்த்து இருக்கிறது. பல மாநில அரசுகளை கவிழ்த்து உள்ளது. பல மாநில கட்சிகளின் லோக்சபா எம்பிக்கள் அணி மாறுவதற்கு பாஜக உதவியாக இருந்துள்ளது. பல கட்சிகளை உடைத்தும் உள்ளது.
இந்த நிலையில் எம்பிக்கள் கொறடா உத்தரவை மீறி மாற்று கட்சிக்கு வாக்களிக்கும் போது அவர்களை தகுதி நீக்கும் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கே இருக்கும். இதில் கோர்ட் கூட தலையிட முடியாது. உதாரணமாக எதிர்காலத்தில் பாஜக ஆட்சிக்கான ஆதரவை தெலுங்கு தேசம் வாபஸ் வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது தெலுங்கு தேசம் எம்பிக்களை பாஜக பிரித்து தங்கள் பக்கம் இழுக்கலாம் . இதனால் தெலுங்கு தேசம் எம்பிக்கள் கொறடா உத்தரவை மீறி பாஜகவிற்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட நேரத்தில் தெலுங்கு தேசத்து எம்பி சபாநாயகராக இருந்தால்.. அவர் அணி மாறி வாக்களிக்கும் எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். அதுவே பாஜக எம்பியாக இருந்தால்.. தெலுங்கு தேசம் எம்பிகளை தகுதி நீக்கம்ஸ் செய்து அணி மாறும் எம்பிக்களுக்கு ஆதரவாக கூட செயல்படுவார்.
இதேதான் நிதிஷ் குமார் கட்சியிலும். இதன் காரணமாகவே சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இதனால் இரண்டு பேருமே சபாநாயகர் பதவி வேண்டும் என்று உறுதியாக கேட்டுள்ளனர். என்ன நடந்தாலும் எங்களுக்கு சபாநாயகர் பதவி வேண்டும் என்று உறுதியாக கேட்டு இருக்கின்றனர்.
பெரிய அமைச்சரவை எல்லாம் வேண்டாம்.. எங்களுக்கு சபாநாயகர் பதவி வேண்டும் என்பதில் முக்கியமாக சந்திரபாபு நாயுடு உறுதியாக இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications