Chandrababu Naidu: பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு நீர் வழங்குவோம்..விஜய் மீட்டிங்கில் அறிவித்த சந்திரபாபு நாயுடு

Subscribe to Oneindia Tamil

அமராவதி: நீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை வழங்குவோம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய்யுடனான சந்திப்பு முடிந்த சிறிது நேரத்தில் இந்த அறிவிப்பை சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். விஜயவாடாவில் முதல்வர் விஜய்யை சந்தித்து உரையாடியாது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

மேலும், தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது மற்றும் கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து விவாதித்தோம் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Chandrababu Naidu Big announcement after meeting Vijay says supply water to TN despite shortage

விஜய் சந்திரபாபு நாயுடு

தமிழக முதல்வர் விஜய் இன்று ஆந்திரா பயணம் மேற்கொண்டார். விஜயவாடாவில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அங்குள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் விஜய்யை வரவேற்றனர். தொடர்ந்து ஆந்திர முதல்வர் இல்லத்தில் தமிழக முதல்வர் விஜய் - சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினர்.

அதன் பின்னர் விஜயவாடாவில் நடைபெற்ற ஆந்திர மாநிலத்தின் கலாசார மற்றும் ஆன்மிக திருவிழாவில் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சந்திரபாபு நாயுடுவும் உடன் இருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டம்

கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். துர்க்கை அம்மன் தான் விஜய்யை விஜயவாடாவுக்கு வரவழைத்துள்ளார். மாநிலங்கள் வேறு, வேறாக இருந்தாலும் நாட்டின் வளர்ச்சியே முக்கியம். கோதாவரி - காவிரி ஆறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். 2047 ஆம் ஆண்டு இந்தியா உலக நாடுகளில் முதலிடம் பெறும்' என்றார்.

முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் சந்திரபாபு நாயுடு பதிவிட்டு இருந்ததாவது:- தமிழக முதல்வர் விஜய்யை இன்று விஜயவாடாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்திப்பின் போது, இரு மாநிலங்களுக்கும் - இடையேயான பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நடத்தினோம்.

குறிப்பாக, தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது மற்றும் கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து விவாதித்தோம். இந்த ஆண்டு இதுவரை சென்னைக்கு 4.08 டிஎம்சி தண்ணீரை ஆந்திரா திறந்து விட்டுள்ளது.

எங்களுக்கு பற்றாக்குறை இருந்தாலும்..

எங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்தபோதிலும், மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, அண்டை மாநிலமான தமிழகத்துக்கு தொடர்ந்து உதவ உறுதியாக உள்ளோம். தண்ணீர் என்பது மோதலுக்கான ஆதாரமாக இல்லாமல், ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

மாநிலங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பும், மத்திய அரசின் ஆதரவும் இருந்தால், கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும். விவசாயத்தை மேம்படுத்தி, தென்னிந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வில் வளத்தைக் கொண்டு வரும். ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், பொதுவான நீர்வளத்தை வளமாக மாற்ற முடியும்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+