சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாருக்கு கிடைத்த அதிகாரம்...திமுகவை நோக்கி வீசப்பட்ட தூண்டில் என்ன ஆச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத்தில் மேகதாது அணை குறித்து முதன்முதலில் விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் கொடுத்திருப்பது மிகச்சரியான நகர்வு. இது கர்நாடகாவில் ஆட்சி நடத்தும் காங்கிரஸுக்குப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் திறனாய்வாளர் முனைவர் பொன்ராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தேசிய மற்றும் மாநில அரசியல் சூழலில் திமுகவின் வியூகங்கள், கொள்கை உறுதிப்பாடு, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அநத் பேட்டியில் விரிவாகவே பேசியிருக்கிறார் பொன்ராஜ்.

பொன்ராஜ் அந்த பேட்டியில், "தொகுதி மறுவரையறை (Delimitation) செய்யும்போது வெறும் மக்கள் தொகையை மட்டும் அளவுகோலாக வைத்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற தென்மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும், நமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமே பறிபோகும்.

Chandrababu Naidu Nitish Kumar DMK Offer DMK I Paranthaman Chandrababu Naidu

மக்கள்தொகை கண்ட்ரோலை மதிக்காத வடமாநிலங்கள் அதிக பலனை அடையும். இதை தவிர்க்க வேண்டுமானால், நிதிக்குழு வரிப் பகிர்வுக்கு பயன்படுத்தும் சூத்திரத்தைப் போல, ஜிடிபி (GDP), வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் போன்ற பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய நியாயமான சூத்திரத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

தென்மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இத்தகைய நியாயமான திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை.

மசோதாவை எதிர்க்கும் திமுக

ஆனால், மத்திய அரசு அப்படி செய்யாமல் வடமாநிலங்களுக்கு ஒரு நீதி, தென்மாநிலங்களுக்கு ஒரு நீதி என்று செயல்பட்டால், திமுக இந்த மசோதாவை நிச்சயம் எதிர்த்து வாக்களிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதை திமுக தலைவர் ஸ்டாலினே தெளிவுபடுத்தியிருக்கிறார். பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக காங்கிரசுடன் சேரவேண்டிய என்ற அவசியமே இல்லை.

காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் வெறுமனே பேச்சு வார்த்தைகளுடன் நிறுத்திக் கொள்கிறதே தவிர, தொகுதி மறுவரையறைக்கு எதிராக மாநில அளவில் எந்தவொரு வலுவான போராட்டத்தையும் நடத்தவில்லை. தொகுதி மறுவரையறைக்கு எதிராக காங்கிரஸ் எடுத்து போட்ட துரும்பு என்ன? எனவே காங்கிரஸை நம்பி எந்தப் பயனும் இல்லை..

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்

அதேபோல, திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் வெறும் அவதூறுகள். தவெக, நிர்மல் குமார் போன்ற ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட நபர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சாரம் இது. காங்கிரஸை போல திமுக முதுகில் குத்தும் கட்சியோ அல்லது தனது கொள்கையை அடமானம் வைக்கும் கட்சியோ கிடையாது.

டெல்லியில் மோடிக்கு ஆட்சி அமைக்க அறுதிப்பெரும்பான்மை கிடைக்காமல் திணறியபோதே, திமுக தன் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுபோய் அடமானம் வைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாருக்கு கிடைத்த அதே மரியாதையும் அதிகாரமும் திமுகவுக்கும் கிடைத்திருக்கும். ஆனால் திமுக ஒரு கொள்கை வழியில் நடக்கக்கூடிய சுயமரியாதை இயக்கம் என்பதால் அதை செய்யவில்லை. திமுக எப்படி நடக்க வேண்டும் என்று சொல்வதற்கு தவெகவுக்கும், காங்கிரசுக்கும் அருகதையே இல்லை..

திமுகவின் சரியான நகர்வு

நாடாளுமன்றத்தில் மேகதாது அணை குறித்து முதன்முதலில் விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் கொடுத்திருப்பது மிகச்சரியான நகர்வு. இது கர்நாடகாவில் ஆட்சி நடத்தும் காங்கிரஸுக்குப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஆனால் நடைமுறையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீர் வரவில்லை. 2023-ல் இதே சூழல் வந்தபோது, திமுக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, மத்திய காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் தண்ணீரைத் திறக்க வைத்தது.

காவிரி நீர் உரிமை

ஆனால் இப்போது கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடமோ அல்லது உங்கள் கூட்டணிச் சகோதரர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவிடமோ பேசினீர்களா? அவர்களிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று கர்நாடக அமைச்சர் சொல்கிறார். அப்படியென்றால் இங்கு உட்கார்ந்துகொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

காவிரி நீர் உரிமையைப் பெற எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல், சோசியல் மீடியாவில் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் போலீஸை வைத்து அரஸ்ட் செய்து மிரட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த அடக்குமுறையை விட்டுவிட்டு, மாநில சுயாட்சி மற்றும் காவிரி நீர் உரிமையை மீட்டெடுக்க அரசு ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்ய வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+