"ஆக்டிவ்".. நிலவில் சொருகப்பட்ட கருவி.. ஒரே வாரத்தில்.. சந்திரயான் 3ன் எதிர்பாராத கண்டுபிடிப்பு
சென்னை: நிலவின் தரைப்பரப்பு வெப்பநிலை வேறு வேறாக இருப்பதாக சமீபத்தில் சந்திரயான் 3 கண்டுபிடித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் ஆனது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.
சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

பிரக்யான் ரோவர் நிலவில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் தங்களுடன் கொண்டு சென்ற எல்லா கருவிகளையும் நிலவில் இறக்கி உள்ளது. பல்வேறு சோதனைகளை செய்ய நிலவில் சந்திரயான் 3 மூலம் பல்வேறு கருவிகள் களமிறக்கப்பட்டன.
அந்த கருவிகள் எல்லாமே தற்போது நிலவின் மேல்பகுதியில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதாவது ஆக்டிவ் ஸ்டேட்டஸுக்கு வந்துள்ளது. லேண்டர், ரோவர் அல்லாத சிறியதும் பெரியதுமான 8 கருவிகள் நிலவில் களமிறக்கப்பட்டு உள்ளன.
சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி நிலவில் கடந்த சனிக்கிழமை இறக்கப்பட்டது. இதன் ரீடிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. விண்வெளி இயற்பியல் ஆய்வகம் (SPL), விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்துடன் (PRL) இணைந்து இந்த சோதனை கருவி உருவாக்கப்பட்டது.
இங்கே இருக்கும் மணல் பரப்பு, உட்பரப்பில் செய்யப்பட்ட சோதனையில் அவை பெரிதாக வெப்பத்தை கடத்தவில்லை. அதேபோல் இங்கே வெப்பம் வேறு வேறாக இருக்கிறது. அதாவது ஒரே வெப்பம் இல்லை. வெப்பத்தில் பெரிய மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பகிர்ந்துள்ள ஒரு வரைபடம், நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுபாடுகளை 0 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை விளக்கியுள்ளது, இது பல்வேறு ஆழங்களில் லேண்டரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆழம் மாற மாற வெப்பநிலையும் பூமியில் இருப்பது போலவே மாறி உள்ளது. நிலவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் ஆனது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.
எப்படி?: சந்திரயான்-3 இன் லேண்டர், ஒவ்வொரு ஆழத்திலும் வெப்பநிலை மாறுபாட்டை அளவிட, நிலவின் மண்ணில் 10 செ.மீ நீளமுள்ள ஒரு ஆய்வு கருவியை செருகுவதன் மூலம் இந்தத் தரவைச் சேகரிக்கிறது. இதில் 10 வெப்பநிலை மானிகள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கிட்டத்தட்ட சந்திர மேற்பரப்பில் செருகப்பட்ட ஒரு வெப்பமானி போன்றது. மேல் மேற்பரப்பில் இருந்து கீழே செல்லும்போது நிலவின் மேற்பரப்பில் வெப்பம் எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதே இஸ்ரோவின் கவனம். அங்கே தண்ணீர் நிலையை கண்டுபிடிக்க இது உதவும் என்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
பிரக்யான் ரோவர்: பிரக்யான் ரோவர் நிலவில் இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலொஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இதில் மொத்தம் 6 சக்கரங்கள் இருக்கும். லேண்டர் தொகுதி: 26 கிலோ ரோவர் உட்பட 1752 கிலோ எடை கொண்டது.
குறிக்கோள் என்ன?: சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது.
லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல். இது வெற்றிகரமாக முடிந்துவிட்டது.
நிலவின் வெப்பம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்வது. இந்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தல்.
நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications