நிலாவை ரவுண்ட் அடிக்க ரெடியாகும் சந்திரயான் 3.. இன்னைக்கு ரொம்ப ரொம்ப முக்கிய நாள் - அதென்ன LOI?
சென்னை: நிலவை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்து பூமியின் சுற்றுவட்டப் பாதையை சுற்றிய சந்திராயன் 3 விண்கலம் இன்று நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு செல்ல உள்ளது.
ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பி சாதித்து இருக்கின்றன. இந்த வரிசையில் 4 வது நாடாக இடம்பிடிக்க இந்தியா கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறது.
இதற்காக இஸ்ரோ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலம் நிலவை நோக்கி அனுப்பப்பட்டு தோல்வி அடைந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலமும் ரோவர் கருவி தரையிறங்கும்போது மோதி வெடித்து சிதறியதால் தோல்வி அடைந்தது. அதன் தொடர்ச்சியாக சந்திராயன் 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதற்கான கவுன்ட் டவுன் நிறைவடைந்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட விண்கலம், இந்த சந்திராயன் 3 விண்கலம் ஒரு மாதம் கழித்து வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று கூறப்படுகிறது. நிலவின் இருண்ட பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட இதை, அதன் தெற்கு பகுதியில் இந்த தரையிறக்கும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்கானித்து வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக சுமார் 14 நாட்கள் கழித்து சந்திராயன் 3 விண்கலம் நிலவில் செயல்பட தொடங்கும். சந்திராயன் 3 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து, விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கி தரையிறங்கும்.
கடந்த 15 ஆம் தேதி புவியின் சுற்றுவட்டப் பாதையை முதல் முறை வெற்றிகரமாக சுற்றி வந்த சந்திரயான் 3, கடந்த ஜூலை 26 ஆம் தேதி 5 வது முறையாக விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை வெற்றிகரமாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப் பாதைக்குள் தள்ளுவதற்கான உந்து விசை செலுத்தப்பட்டது.
தற்போது நிலவின் 2 பங்கு தூரத்தின் பெரும்பகுதியை கடந்து இருக்கும் இருக்கும் நிலையில், இன்று இரவு 7 மணியளவில் நிலவின் சுற்றவட்டாப் பாதையில் சுற்றி தனது அடுத்துக்கட்ட பயணத்தை தொடங்கும். இந்த கட்டம் LOI, அதாவது லூனார் ஆர்பிட் இன்ஜெக்சன் என்று அழைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications