சந்திரயான் 3.. பிரக்யான் வெளியிட்ட விக்ரம் லேண்டரின் போட்டோவை.. கவனிச்சீங்களா? கீழே இருப்பது என்ன?
சென்னை: சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் புகைப்படத்தை பிரக்யான் ரோவர் படம் பிடித்து வெளியிட்டு உள்ளது. இந்த புகைப்படத்தின் கீழ் இருக்கும் இரண்டு கருவிகள் கவனம் பெற்றுள்ளன.
சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

பிரக்யான் ரோவர் நிலவில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் தங்களுடன் கொண்டு சென்ற எல்லா கருவிகளையும் நிலவில் இறக்கி உள்ளது. பல்வேறு சோதனைகளை செய்ய நிலவில் சந்திரயான் 3 மூலம் பல்வேறு கருவிகள் களமிறக்கப்பட்டன.
இந்த நிலையில்தான் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் புகைப்படத்தை பிரக்யான் ரோவர் படம் பிடித்து வெளியிட்டு உள்ளது. இந்த புகைப்படத்தின் கீழ் இருக்கும் இரண்டு கருவிகள் கவனம் பெற்றுள்ளன.
இரண்டு கருவிகள்: அதன்படி விக்ரம் லேண்டருக்கு கீழே இரண்டு கருவிகள் கம்பி போல பொருத்தப்பட்டு உள்ளது. இதில் ஒன்று சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி. இன்னொன்று நிலவின் நிலநடுக்கத்தை கணக்கிடும், Lunar Seismic Activity (ILSA) என்னும் கருவி.
இந்த கருவிகள் எல்லாமே தற்போது நிலவின் மேல்பகுதியில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதாவது ஆக்டிவ் ஸ்டேட்டஸுக்கு வந்துள்ளது. லேண்டர், ரோவர் அல்லாத சிறியதும் பெரியதுமான 8 கருவிகள் நிலவில் களமிறக்கப்பட்டு உள்ளன.

சாஸ்ட்: இந்த கருவிகளின் புகைப்படங்கள்தான் தற்போது விக்ரம் லேண்டரின் கீழே உள்ளது. சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி நிலவில் கடந்த சனிக்கிழமை இறக்கப்பட்டது. இதன் ரீடிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. விண்வெளி இயற்பியல் ஆய்வகம் (SPL), விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்துடன் (PRL) இணைந்து இந்த சோதனை கருவி உருவாக்கப்பட்டது.
இங்கே இருக்கும் மணல் பரப்பு, உட்பரப்பில் செய்யப்பட்ட சோதனையில் அவை பெரிதாக வெப்பத்தை கடத்தவில்லை. அதேபோல் இங்கே வெப்பம் வேறு வேறாக இருக்கிறது. அதாவது ஒரே வெப்பம் இல்லை. வெப்பத்தில் பெரிய மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பகிர்ந்துள்ள ஒரு வரைபடம், நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுபாடுகளை 0 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை விளக்கியுள்ளது, இது பல்வேறு ஆழங்களில் லேண்டரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆழம் மாற மாற வெப்பநிலையும் பூமியில் இருப்பது போலவே மாறி உள்ளது. நிலவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் ஆனது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 30, 2023
Smile, please📸!
Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.
The 'image of the mission' was taken by the Navigation Camera onboard the Rover (NavCam).
NavCams for the Chandrayaan-3 Mission are developed by the Laboratory for… pic.twitter.com/Oece2bi6zE
எப்படி?: சந்திரயான்-3 இன் லேண்டர், ஒவ்வொரு ஆழத்திலும் வெப்பநிலை மாறுபாட்டை அளவிட, நிலவின் மண்ணில் 10 செ.மீ நீளமுள்ள ஒரு ஆய்வு கருவியை செருகுவதன் மூலம் இந்தத் தரவைச் சேகரிக்கிறது. இதில் 10 வெப்பநிலை மானிகள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கிட்டத்தட்ட சந்திர மேற்பரப்பில் செருகப்பட்ட ஒரு வெப்பமானி போன்றது. மேல் மேற்பரப்பில் இருந்து கீழே செல்லும்போது நிலவின் மேற்பரப்பில் வெப்பம் எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதே இஸ்ரோவின் கவனம். அங்கே தண்ணீர் நிலையை கண்டுபிடிக்க இது உதவும் என்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications