விருப்ப பாடங்களை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு.. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் அதிரடி மாற்றம்
சென்னை: மலையாளம், இந்தி, உருது உள்ளிட்ட மொழிகளை விருப்ப பாடமாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இந்த புதிய மாற்றம் அமலுக்கு வர உள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் எஸ் எஸ் எல் சி எனப்படும் பத்தாம் வகுப்பு தேர்வு முறையில் அதிரடி மாற்றம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அமைச்சர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தற்போது வரை பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்கள் என 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுகிறார்கள். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் , சமூக அறிவியல் என ஐந்து பாடங்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள். இந்த ஐந்து பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சிக்கான மதிப்பெண்களாக கணக்கிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே மாணவர்கள் உயர் கல்விக்கு சென்று விடுகிறார்கள். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரையிலாவது தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் படிக்க வேண்டும் . தேர்வு எழுத வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன்படி, பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அதாவது சிறுபான்மை மொழிகளான மலையாளம், உருது, இந்தி உள்ளிட்ட மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எழுதி தேர்ச்சி பெற வேண்டும். என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. சிறுபான்மை மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் தங்களுடைய மொழியை தேர்வாக எழுத வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நான்காவது பாடமாக விருப்ப பாடம் என்ற நடைமுறை கொண்டு வரப்படது. அதன்படி தமிழ் அல்லாது பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் அந்த விருப்ப பாடத்தை எழுதிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விருப்ப பாடத்தை எழுதினாலும் அதில் பெறக்கூடிய மதிப்பெண்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
10 ஆம் வகுப்பு சான்றிதழிலும் அந்த மாணவர் எவ்வளவு மதிப்பெண் பெற்றார் என்ற விவரம் மட்டுமே பதிவு செய்யப்படும். மாணவர் தேர்ச்சியா அல்லது தோல்வியா என்ற விவரம் பதிவு செய்யப்படாது. இந்த நிலையில், சிறுபான்மை மொழி அமைப்புகளை சேர்ந்த சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மதிப்பெண் பட்டியலில் தங்களுடைய மொழிக்கான பாடத்தில் உரிய மதிப்பெண் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது.
உரிய தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களாக அந்த பாடங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. அதில், விருப்ப பாடத்தையும் தேர்ச்சிக்குரிய ஒரு பாடமாக கணக்கில் எடுத்துக்கொள வேண்டும் என்று கூறியது. இதனைப் பின்பற்றியே பள்ளிக்கல்வித்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் கல்வியாண்டில் இருந்து 2024 - 25 ல் இருந்து புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன்படி தமிழ் அல்லது பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள், விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மட்டும் 6 பாடங்களுக்கும் சேர்த்து 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
விருப்ப பாடத்திற்கும் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணாக 35 கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனினும், தமிழை தாய்மொழியாக கொண்ட 5 பாடங்களுக்கு மட்டுமே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த புதிய விதி பொருந்தும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications