Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாகன ஓட்டிகளே அலர்ட்! சென்னை அண்ணாசாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. காவல்துறை முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்வதற்காக போக்குவரத்தில் சில மாற்றங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை மேற்கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 10 ஆம் தேதி) முதல் அண்ணாசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்களை வாகன ஓட்டிகள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

சென்னையின் இதயப்பகுதி என்று அண்ணா சாலையை செல்லலாம். இரவு நேரத்தில் கூட வாகனங்கள் படு பிசியாக அண்ணாசாலையில் அணிவகுப்பதை காண முடியும். அதுவும் பீக் நேரங்களில் சொல்லவே தேவையில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து செல்வதை காண முடியும். தேனாம்பேட்டை சிக்னலை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

Change in traffic at Annasalai from oct 10, Chennai traffic police orders

தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக இன்று (செவ்வாய்க்கிழமை அக்.10) முதல் சோதனை ஓட்டம் அடிப்படையில் புதிய முயற்சியை சென்னை போக்குவரத்து துறை எடுத்துள்ளது. அதன்படி, அண்ணாசாலையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டி கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று (10.10.2023) முதல் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.

1. ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணா சாலை x ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்லலாம். ஒயிட்ஸ் சாலை x ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை.

2. பட்டுள்ளாஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை X பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்லலாம். அண்ணா சாலை x பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை.

3. ஜி.பி.ரோடு சந்திப்பு மற்றும் பின்னி சாலையில் இருந்து அண்ணாசாலை வந்து ஒயிட்ஸ் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக ஸ்மித் ரோடு சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி ஸ்மித் ரோடு, ஒயிட்ஸ் ரோடு சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

4.இராயப்பேட்டை மணிகூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை.

5.திரு.வி.க. x ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை. அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

6. அண்ணாசாலை X பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி அண்ணாசாலையில் ஸ்பென்சர் எதிர்புறம் உள்ளே U வளைவில் திரும்பி பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லலாம். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+