BSNL 4G சேவை கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!
சென்னை: பிஎஸ்என்எல் சிம் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு ஹாப்பி நியூஸை தெரிவித்திருந்தது. அதாவது, சென்னை, டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் பிஎஸ்என்எல் 4G சேவை வழங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அந்த அறிவிப்பு. ஆனால் சென்னையில் பல இடங்களில் இந்த சிம் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு H+ என்றுதான் காட்டுகிறது. இதை மாற்றி 4ஜி சேவையை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவுக்கு பல பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சிலது மட்டுமே நவரத்தினங்கள் என்று அழைக்கப்படுகிறது. பிஎஸ்என்எல்-ம் நவரத்தினங்களில் ஒன்றுதான். ஆனால், அது எல்லாம் நேரு காலங்களில்தான். இப்போது பிஎஸ்என்எல் சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருக்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் எல்லாம் வெளிநாடுகளிலிருந்து தேவையான உபகரணங்களை வாங்கி அதில் 4G-5G சேவையை கொடுக்கலாம். பிஸ்என்எல் மட்டும் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு போட்டுவிட்டது.

இதில் டிவிஸ்ட் என்னவெனில், உள்நாட்டில் தற்போது வரை 4ஜி சேவைகளை வழங்கும் அளவுக்கு எந்த கருவிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. மிக சமீபத்தில்தான் டிசிஎஸ் இதற்கான கருவிகளை உருவாக்க முன்வந்திருக்கிறது. இது உருவாக்கி கொடுத்துள்ள கருவிகளை கொண்டு சில இடங்களில் 4G சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சென்னை, கோவை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் 4G சேவை வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிலர் இன்னும் 4G சேவை கிடைக்கவில்லை என்று புலம்ப தொடங்கியுள்ளனர். சில நேரங்களில் 4G சர்வீஸ் கிடைப்பதாகவும் பல நேரங்களில் H+ என்று மட்டுமே காட்டுவதாகவும் கூறியுள்ளனர். இந்த பிரச்னையை சரி செய்ய மொபைலில் நெட்வொர்க் செட்டிங்களில் சிறிய மாற்றம் செய்தால் போதும். உடனே 4G கனெக்ஷென் கிடைத்துவிடும்.
அதாவது, முதலில் Settings உள்ளே செல்ல வேண்டும். அங்கு Network and internet என்கிற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Mobile netwok என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். இதில் கடைசியாக Advanced என்கிற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால், Automatically select network என்றும் ஆப்ஷன் ON செய்து இருக்கும். இதை OFF செய்தால் புதிய நெட்வொர்க் கனெக்ஷன்கள் காட்டும். நீங்கள் இருக்கும் பகுதியில் என்னென்ன நெட்வொர்க் எடுக்கிறதோ அது அனைத்தும் காட்டும். அத்துடன் Cellone, BSNL என நெட்வொர்க்கும் காட்டும். இதில் நீங்கள் Cellone-ஐ
கிளிக் செய்ய வேண்டும்.
இப்படி செய்தவுடன் பிஎஸ்என்எல் 4G எடுக்க தொடங்கிவிடும். ஆனால் மறக்காமல் மீண்டும் Automatically select network-ஐ ON செய்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் வேறு எங்கு சென்றாலும், நெட்வொர்க் பிரச்னை இல்லாமல் இருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications