நோட் பண்ணீங்களா? உதயநிதி காரில் பொருத்தப்பட்ட புதிய "பிட்டிங்".. அப்போ அதுதானா? பரபரக்கும் அறிவாலயம்
சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கார் குறித்த தகவல் ஒன்று அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வெளியே திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற சென்றார். இந்த செய்தி தீவிரமாக பரவியது.
இதையடுத்து சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நானும் சில சமயம் எடப்பாடி பழனிசாமி காரில் ஏற சென்று இருக்கிறேன். நீங்கள் என் காரை வேண்டுமானால் எடுத்து செல்லலாம். தவறில்லை.

கார் உதயநிதி
ஆனால் என் காரை எடுத்துக்கொண்டு கமலாலயம் மட்டும் சென்றுவிட வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். இந்த விவாதம் அரசியல் கடந்து அதிமுக, திமுக இடையே சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் கார் குறித்த செய்தி ஒன்று திமுகவினர் இடையே தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல ஸ்டாலின் திட்டமிட்டிருப்பது ஏற்கனவே வெளியான செய்தி.

உதயநிதி அமைச்சர்
இந்த வருட இறுதியில் இந்த பயணம் அமையலாம். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது வெளிநாடு பயணம் செல்வதற்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் செய்து உதயநிதியை அமைச்சராக்க ஆலோசனைகள் நடப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஒன் இந்தியா சார்பாகவும் இது பற்றி செய்தி ஒன்று வெளியிட்டு இருந்தோம். உதயநிதியை அமைச்சராக்கி நிர்வாகத்தை கவனிக்கும்படி பொறுப்புகளை அவரிடம் கொடுக்கப்படலாம்.

ஸ்டாலின் வெளிநாடு
முதல்வர் வெளிநாட்டில் இருக்கும் வரை முக்கிய பணிகளை உதயநிதி செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தன. செப்டம்பர், அக்டோபரில் இதற்கான அறிவிப்புகள் வரலாம் என்றும் கூறப்பட்டது. இதனால் அறிவாலய வட்டாரங்கள் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது உதயநிதி கார் குறித்த செய்தி ஒன்று திமுகவினர் இடையே விவாதம் ஆகியுள்ளது.

என்ன மாற்றம்
உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் காரில் புதிதாக முன் பக்கம் எக்ஸ்ட்ரா பிட்டிங் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த பிட்டிங் இலச்சினை பொருத்துவதற்காக வைக்கப்படும் பிட்டிங் ஆகும். இதுநாள் அவரை அவரின் காரில் இல்லாத பிட்டிங் தற்போது பொருத்தப்பட்டு உள்ளது. இதுதான் திமுகவினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், காரில் இந்த பிட்டிங் இலச்சினை வைக்க பயன்படுத்தும். அமைச்சர்கள் காரில் தமிழ்நாடு இலச்சினை இருக்கும்.

அமைச்சர் பதவியா?
அமைச்சர்கள் எல்லோரின் காரில் இது பொருத்தப்பட்டு இருக்கும். இந்த நிலையில்தான் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் காரில் அதே பிட்டிங் செய்யப்பட்டு இருப்பதால் விரைவில் அவரின் காரிலும் இலச்சினை பொருத்தப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லை வெறுமனே வேறு ஏதாவது இலச்சினை அல்லது உதயசூரியன் சின்னம் வைக்க இந்த பிட்டிங் செய்து இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications