நவம்பர் 1 முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் கால அட்டவணை மாற்றம்.. விவரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைக்கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை நவம்பர் 1ம் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை(அரக்கோணம்) வரை உள்ள மக்கள் முதன்மை போக்குவரத்தாக மின்சார ரயிலை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டவுஸ் பஸ் போல அடிக்கடி மின்சார ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் ஓடுகின்றன. காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்ப இந்த மின்சார ரயில்கள் மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளன. இதில் அரக்கோணம் வழித்தடம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழித்தடம், சூலூர்பேட்டை வழித்தடம் ஆகியவை அண்டை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளன. இவற்றில் சில மாற்றங்கள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

Changes to the Chennai suburban electric train timetable effective November 1 Details

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையின் கால அட்டவணை நவம்பர் 1முதல் எப்படி

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் - சென்ட்ரல் இடையே புதிய மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ரயில் திருவள்ளூரில் இருந்து மதியம் 12.25 மணிக்கு புறப்பட்டு 1.45 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். காலை 7.10 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பட்டாபிராம் வரை இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை, திருவள்ளூர் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில் 8.30 மணிக்கு திருவள்ளூர் வந்தடையும். இந்த ரயில் 8.45 மணிக்கு திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு 10.20 மணிக்கு சென்ட்ரல் சென்றடையும்.

சென்ட்ரலில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் வரை இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில் கடம்பத்தூர் வரை நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரயில் கடம்பத்தூரில் இருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்பட்டு 5.05 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். சென்ட்ரலில் இருந்து இரவு 7.30 மணிக்கு அரக்கோணத்துக்கு அதிவேக மின்சார ரெயிலாக இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை இனி அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

இதேபோல, சென்ட்ரல் - சூலூர்பேட்டை வழித்தடத்தில் புதிய கால அட்டவணையின் படி சில ரயில் சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்ட்ரலில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில் சூலூர்பேட்டையில் இருந்து 8.10 மணிக்கு புறப்பட்டு 10.40 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில், அரக்கோணத்தில் இருந்து 7.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரியில் நின்று செல்லும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சீபுரம் - அரக்கோணம் வழித்தடம், சென்னை கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் கால அட்டவணை மாற்றம் செய்யப்படவில்லை. குறிப்பிட்ட சில நேரங்களுக்கு மட்டும் நேரமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+