தமிழகத்தில் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம்.. இன்று முதல் பத்திரப்பதிவு நாளிலேயே கிடைத்துடும்
சென்னை: பத்திரப்பதிவு முடிந்த கொஞ்ச நேரத்திலேயே பட்டாவில் தானியங்கி முறையில் பெயர் மாற்றம் செய்வது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பட்டா பெறுவதில் நிலவிவந்த சிக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
பொதுவாக, பாடுபட்டு நிலம் வாங்கும் உரிமையாளர்கள், அந்த இடத்திற்கு பட்டா வாங்குவதற்கு படாதபாடு படவேண்டியிருக்கிறது.. இதற்காக நடையாய் நடந்து காலவிரயம் ஏற்பட்டது.. எத்தனையோ பேருக்கு, பட்டா வாங்க முடியாமல் சம்பந்தப்பட்ட நிலம் கைநழுவி சென்ற சம்பவமும் உண்டு.. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களுக்கெல்லாம் இன்று முதல் விடியல் பிறந்துள்ளது.
சீர்திருத்தங்கள்: பத்திரப்பதிவு துறையில் ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது... இதற்காக பல்வேறு வகையான சீர்திருத்தங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அந்தவகையில், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, பத்திரப்பதிவு முடிந்த ஒரு வாரத்திற்குள்ளேயே சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உட்பிரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நில கிரையங்களில் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட உடனே பட்டா மாற்றம் தானியங்கியாக மேற்கொள்ளப்படும். எனவே, கிரையம் பெறுபவர் துரிதமான பட்டா மாறுதல் சேவையைப் பெற தனது கைப்பேசி எண் மற்றும் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.
சொத்து ஆவணங்கள்: இந்த புதிய நடைமுறையின்படி, ஒருவர் சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் இது குறித்த தகவல்கள் அனைத்துமே பதிவுத்துறையே வருவாய்த்துறைக்கு தெரிவித்து விடும். பதிவுத்துறை அளிக்கும் தகவலின்படி அவருக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
பதிவுத்துறைத் தலைவரின் அறிவுரையின் படி, 100% தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய இன்று ஜூன் 15ம் தேதி முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பத்திரப் பதிவுக்கு பின்பு ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் மூலம் கிரையம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சார் பதிவாளர்: கடந்த சில ஆண்டுகளாகவே, சார் பதிவாளர் அலுவலகங்களில் இதற்கான பணி நடந்து வந்தநிலையில், இன்று முதல் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.. இதன் அடிப்படையில், பொதுமக்கள் இணையதளத்தில் இருந்து பெயர் மாற்றப்பட்ட பட்டாவின் பிரதியை சில மணி நேரத்திலேயே எடுத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications