நிதி நிறுவன மோசடி வழக்கு! சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர்க்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனம், நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஏழு பேருக்கு எதிராக
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கில் சாலமன் மோகன்தாஸ் இது வரை கைது செய்யபடவில்லை அவர் தலைமறைவாக உள்ளார். மற்றவர்கள் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர்.
இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை, நிதிநிறுவனம் மற்றும் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.பாபு குற்றத்தை தாக்கல் செய்தார். அந்த குற்றபத்திரிகையில் மொத்தம் ஆயிரத்து 173 பேர் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்து முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து 37 கோடி ருபாய் வழங்கமால் உள்ளது. தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு உள்ளது. விசாரணை முழுமையாக முடிவடையவில்லை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக குற்றபத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முழுமையாக நிறைவடைந்த பிறகு கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications