நேத்துதான் ஸ்டாலின் சொன்னாரு, "சிம்ம சொப்பனம்".. அதற்குள் செந்தில்பாலாஜி மீது பாய்ந்த குற்றபத்திரிகை
செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
சென்னை: நேற்றுதான் "சிம்மசொப்பனம்" என்று திமுக தலைவர், செந்தில்பாலாஜியை சொன்னார்... அதற்குள் இன்று அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது...
கடந்த 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் இவர் மீது எழுந்தது..

விசாரணை
இது பூதாகரமாகி, கடைசியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியும் வந்தனர். இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி பெயர் இடம்பெறாத நிலையில், தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி உட்பட 47 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

சலசலப்பு
மத்திய குற்றப் பிரிவு தாக்கல் செய்துள்ள இந்த 7ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். குற்றப் பத்திரிகையில் அப்போதைய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவம் பெரும் திமுக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

நன்மதிப்பு
இதற்கு காரணம், திமுக தலைவரின் நேரடியான நன்மதிப்பை பெற்றவர் செந்தில் பாலாஜி.. செந்தில்பாலாஜியை பொறுத்தவரை எல்லா கட்சிகளுக்கும் போய்வந்தவர் என்ற ஒரு பெயர் இருந்தாலும், அவர் எந்த கட்சியில் இருக்கிறாரோ, அங்கு சூப்பர் விஐபியாகவே கருதப்பட்டு வருகிறார்..

விஜயபாஸ்கர்
அந்த வகையில் தற்சமயம் திமுகவில் ஐக்கியமாகி, அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு டஃப் தந்து வருகிறார்...பந்தயம் கட்டறேன், முடிந்தால் என்னை ஜெயித்து பார் என்று ஓபனாகவே விஜயபாஸ்கருக்கு சவால் விடுத்து வருகிறார். 2 மாதத்துக்கு முன்பு கிராம சபை நடத்த, திமுக தலைவர் ஸ்டாலின் கரூர் வந்திருந்தபோது, செந்தில் பாலாஜி பற்றி பெருமையாக பேசினார்..

பாராட்டு
"செந்தில்பாலாஜி கட்சியில் வந்து சேர்ந்தபோது, எந்த உணர்வோடு சேர்ந்தாரோ, நான் எந்த உணர்வோடு அவரை இந்தக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேனோ, அதைவிட பல மடங்கு இப்பொழுது செயல்பட்டு கொண்டிருக்கிறார்... அவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், "கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை" என்பார்களே அதுபோலத்தான், அவரை பற்றி தெரிந்து வைத்திருக்கிற உங்களிடத்தில், அவரைப்பற்றியே அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

தள்ளி வைப்பு
நேற்றுகூட, திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு, முக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.. அப்போது அவர் பேசும்போது, "இந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சி என்றால் இவர் சிம்மசொப்பனம்" என்று பெருமை பொங்க பேசினார். அதிமுகவுக்கு செந்தில் பாலாஜி சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்று நேற்று ஸ்டாலின் பூரித்து போய் சொல்லி இருந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 9-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அதுவரை இந்த பரபரப்பின் நீடிப்பும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications