‛ஜிப்லி’ இமேஜால் சாதனை.. இன்ஸ்டாகிராம் - டிக்டாக்கை பின்னுக்கு தள்ளிய சாட் ஜிபிடி.. புது ரெக்கார்ட்
சென்னை: கடந்த மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட செயலியில் இன்ஸ்டாகிராம், டிக்டாக்கை பின்னுக்கு தள்ளி சாட்ஜிபிடி புதிய சாதனை படைத்துள்ளது. சாட்ஜிபிடியின் ஜிப்லி இமேஜ் பேமஸான நிலையில் உலகம் முழுவதும் அதன் டவுன்லோட் என்பது அதிகரித்துள்ளது.
தற்போது ஏஐ தொழில்நுட்பம் என்பது வேகமாக வளர்ந்து வருகிறது. மனிதர்களின் வேலைகளை காலி செய்யும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் துல்லியமாக வேலை செய்து வருகிறது.

இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த நிறுவனம் தான் ஓபன் ஏஐ. இந்த நிறுவனம் ‛சாட் ஜிபிடி'யை உருவாக்கி உள்ளது. இது நம் நாட்டில் உள்ளவர்களும் பயன்படுத்த தொடங்கினர்.
ஆனால் கடந்த மாதம் திடீரென்று ‛சாட்ஜிபிடி'யை டவுன்லோட் செய்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை என்பது உச்சம் தொட்டது. இதற்கு காரணம் அதில் இருக்கும் ‛ஜிப்லி' இமேஜ் டவுன்லோட் செய்யும் வசதி தான். இதற்காக பலரும் கடந்த மாதம் சாட்ஜிபிடியை அதிகம் டவுன்லோட் செய்தனர். இதனால் தற்போது சாட் ஜிபிடி புதிய சாதனையை படைத்துள்ளது.
இதுதொடர்பாக ஆப் ஃபிகர்ஸ் டேட்டா (Appfigures data) சார்பில், ‛‛கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சாட்ஜிபிடியை இன்ஸ்டால் செய்தவர்களின் எண்ணிக்கை என்பது 46 மில்லியனை கடந்தது. 2வது இடத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளது. 3வது இடத்தில் டிக்டாக் செயலி உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் 46 மில்லியன் டவுன்லோட் என்பது 4 கோடியே 60 லட்சமாகும். அதாவது கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 4 கோடியே 60 லட்சம் பேர் சாட்ஜிபிடியை டவுன்லோட் செய்துள்ளனர்.
இந்த சாட் ஜிபிடி என்பது ஓபன் ஏஐ நிறுவனத்தின் தயாரிப்பாகும். சாட்ஜிபிடியை பொறுத்தவரை சமீபத்தில் ஜிப்லி இமேஜ் என்பது அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ஒரு போட்டோவை கார்ட்டூன் வடிவில் உருவாக்கி தருவது தான் ஜிப்லி. இது கடந்த மாதம் உலகம் முழுவதும் டிரெண்ட் ஆனது. பலரும் ஜிப்லி இமேஜை டவுன்லோட் செய்து வலைதளங்களில் பயன்படுத்தினர். இதன் காரணமாக தான் சாட் ஜிபிடி டவுன்லோட் என்பது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கை விட அதிகரித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications