அம்பானியின் அதிரடி பிளான்.. வாடிக்கையாளர்களை தக்கவைக்க ‘ஜியோ’ களத்தில் இறக்கிய 3 ரீசார்ஜ் திட்டங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொபைல் கட்டணங்கள் கடந்த மாதம் அதிரடியாக உயர்த்தப்பட்ட நிலையில், ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் விலை உயர்வால் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், விலை குறைவான 3 ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளது ஜியோ. இந்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை, வேலிடிட்டி, டேட்டா பலன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ. கடந்த மாதம் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனை தொடர்ந்து பிற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின.

Jio recharge mobile

ரீசார்ஜ் கட்டண உயர்வு, வாடிக்கையாளர்களுக்கு வேதனையைக் கொடுத்துள்ளது. ரீசார்ஜ் செய்யும்போதெல்லாம், முன்பு தாங்கள் ரீசார்ஜ் செய்ததை விட அதிக தொகை செலவாவதால் புலம்பி வருகின்றனர். ஜியோ வாடிக்கையாளர்கள் பலர், பி.எஸ்.என்.எல் நோக்கியும் படையெடுத்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல். குறைந்த விலையில் அதிக டேட்டா பலன்களோடு ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருப்பதால் பெரும்பாலானோர் BSNLக்கு மாறி வருகின்றனர்.

இந்நிலையில், பழைய விலையிலேயே சில திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது ஜியோ. ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்குவதாக இருக்கின்றன. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக குறைந்த விலையில் ஓடிடி தள சேவைகளுடன் ஜியோ வழங்கும் சில சூப்பரான பிளான்களை குறித்து பார்க்கலாம்.

ரூ.199 ரீசார்ஜ் பிளான்: இதில் 18 நாள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி, சினிமா, கிளவுட் போன்ற ஓடிடிகளுக்கான சப்ஸ்கிரைப்களும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ரூ.209 திட்டம்: இதில் 22 நாட்கள்ள் வேலிடிட்டியுடன் தினசரி1 ஜி.பி தினசரி டேட்டா கிடைக்கும். அத்துடன் அன்லிமிட்டட் வாய்ஸ் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோவின் பொழுதுபோக்கு சேவைகளும் இந்த திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ரூ.249 திட்டம்: 28 நாள் வேலிடிட்டியுடன் 1 ஜி.பி தினசரி டேட்டா வழங்கும் இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும் ஜியோவின் பொழுதுபோக்கு சேவைகளும் இத்திட்டத்தின் வாயிலாக கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+