சமையல் துறையை இளக்காரமாகத்தான் பார்த்தாங்க! ஆனால் இப்போது! நாதழுதழுத்த செஃப் தாமு
சென்னை: சமையல் துறையை இளக்காரமாகத்தான் நிறைய பேர் பார்த்தார்கள். ஆனால் இப்போது எங்கள் துறைக்கென ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது பெருமையாக இருப்பதாக பத்ம விருது பெற்ற செஃப் தாமு என்கிற தாமோதரன் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
இதுகுறித்து செஃப் தாமு சன் நியூஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு சொல்ல முடியாத ஆனந்தம் இருக்கிறது. எதிர்பார்க்காத ஒன்று. இவ்வளவு பெரிய தேசிய விருது கிடைப்பது பெருமையாக இருக்கிறது. இது போன்று விருதுகள் இருப்பது தற்போது சமையல் கலை பயிலும் மாணவர்களுக்கும் தெரிய வாய்ப்பிருக்கிறது.

இந்த விருதை மத்திய அரசு எனக்கு கொடுப்பதை நான் சந்தோஷமாக கருதுகிறேன்.
இந்த விருது எனக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்!
இதனால் எனக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. இந்த விருதை சமையல் கலை படிக்கும் மாணவர்களுக்கும் ஹோட்டல்களில் இருக்கும் செஃப்களுக்கும் நான் டெடிகேட் செய்கிறேன்.
இந்த சமையல் துறையை நிறைய பேர் இளக்காரமாகத்தான் பேசினார்கள். ஆதரவாக யாருமே பேசவில்லை. இந்த விருது மூலமாக செஃப் கம்யூனிட்டிக்கே ஒரு பெரிய பெயர் கிடைத்திருக்கிறது. இதனால் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
என் வீட்டை சுற்றி பார்த்தால் கின்னஸ் விருது உள்பட 150 விருதுகள் இருக்கும். இதையெல்லாம் விட மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட விருது என்பது பெருமையை கொடுக்கிறது. இதெல்லாம் கிடைக்குமா என ரொம்ப நாளாக நான் கனவு கண்டிருக்கிறேன். கஷ்டப்பட்டேன், அதற்கான பலன் கிடைத்திருக்கிறது.
இதற்காக மத்திய அரசு, மாநில அரசுக்கு நான் நன்றி சொல்கிறேன். எனக்கு உருதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். சமையல் தொழில் அங்கீகரிக்கப்படாமல் இருந்தது. அதை அங்கீகரித்து தற்போது விருது கிடைத்துள்ளது. மாநில அரசும் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை கொடுத்தால் எங்களை போன்றவர்களுகக்கு ஊக்கமாக இருக்கும் என கோரிக்கை விடுக்கிறேன். 40 ஆண்டுகளாக எனது உழைப்புக்கு கிடைத்த கவுரமாக இதை கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 7 பேருக்கு பத்மவிபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 13 பேருக்கு பத்மஸ்ரீ என 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித்குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, தெலுங்கு திரைப்பட நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சமையற்கலை அறிஞர் செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications