Dhamu Appa: சமையல்காரர்களை இளக்காரமாகவே பார்த்தார்கள்! அங்கீகாரத்துக்காக போராடிய செஃப் தாமு உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் துறையை இளக்காரமாக பார்த்தார்கள். ஆனால் இப்போது எங்களுக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமையாக இருப்பதாக பிரபல சமையல் கலைஞர் தாமு என்கிற தாமோதரன் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் தாமோதரன் கோதண்டராமன் எனப்படும் செஃப் தாமு. இவர் பிரபல சமையல் கலை நிபுணராக அறியப்படுகிறார். சமையல் கலைக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது இவரது நீண்டகால ஆதங்கமாக இருந்தது.

chef dhamu

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப் தாமுவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு தாமு தேர்வு செய்யப்பட்டதும் அவர் கொடுத்த பேட்டியில், பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு எனக்கு கொடுப்பதை நான் சந்தோஷமாக கருதுகிறேன். இந்த விருது எனக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்!

இதனால் எனக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. இந்த விருதை சமையல் கலை படிக்கும் மாணவர்களுக்கும் , ஹோட்டல்களில் இருக்கும் செஃப்களுக்கும் நான் டெடிகேட் செய்கிறேன். இந்த சமையல் துறையை நிறைய பேர் இளக்காரமாகத்தான் பேசினார்கள். ஆதரவாக யாருமே பேசவில்லை. இந்த விருது மூலமாக செஃப் கம்யூனிட்டிக்கே ஒரு பெரிய பெயர் கிடைத்திருக்கிறது. இதனால் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

என் வீட்டை சுற்றி பார்த்தால் கின்னஸ் விருது உள்பட 150 விருதுகள் இருக்கும். இதையெல்லாம் விட மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்ம விருது என்பது பெருமையை கொடுக்கிறது. இதெல்லாம் கிடைக்குமா என ரொம்ப நாளாக நான் கனவு கண்டிருக்கிறேன். கஷ்டப்பட்டேன், அதற்கான பலன் கிடைத்திருக்கிறது.

சமையல் துறை நீண்ட காலமாக அங்கீகரிக்கப்படாமல் இருந்தது. அதை அங்கீகரித்து தற்போது விருது கிடைத்துள்ளது. இதே போல் மாநில அரசும் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை கொடுத்தால் ஊக்கமாக இருக்கும். இவ்வாறு தாமு பெருமை பொங்க தெரிவித்திருந்தார்.

செஃப் தாமு கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்திருந்தார். இதனால் கடந்த ஆகஸ்ட் மாதமே இவர் இறந்துவிட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் தாமு வீடியோவில் விளக்கமளித்திருந்தார்.

அதில், "செஃப் தாமு மரணமடைந்துவிட்டார் என்ற வதந்தி பரவி வருகிறது. கடவுள் புண்ணியத்தில் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். பிடிக்காதவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கல்.

அதனால் அதையெல்லாம் நம்பாதீர்கள். காலில் ஊசி செலுத்தியதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை, உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன். அதனால் தேவையில்லாத வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சீக்கிரமே நான் திரும்பி வருவேன். உயிரோடுதான் இருக்கிறேன் என அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

ஆனால் இன்றைய தினம் அவர் காலமாகிவிட்டார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தாமு காலமானார். இவர் ஒரே நாளில் 617 உணவுகளை சமைத்து கின்னஸ் சாதனை படைத்தவர். பிஎச்டி முடித்த முதல் இந்திய சமையல் கலைஞரும் இவரே! இவரது இறப்புக்கு வெங்கடேஷ் பட், மாதம்பட்டி ரங்கராஜ், நடிகர்கள் புகழ், குரேஷி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தாமுவின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+