Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம்பரம்பாக்கம் ஏரியில் 750 கன‌அடி நீர் திறப்பு! அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அலர்ட் மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 10 மணிக்கு 750 கன‌அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.27 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,980 கனஅடியாக உள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததன் எதிரொலியாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. தொடர்ந்து 24 மணி நேரமும் செம்பரம்பாக்கம் ஏரியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

chennai flood puzhal

கனமழை காரணாமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 21 அடியாக உயர்ந்ததால் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 100 கன அடி உபரிநீர் மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வருவதால் யாரும் அடையாறு ஆற்றுக்குள் இறங்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது என்று நீர்வளத்துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏரி மொத்தம் 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகவும், அதன் நீரின் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் அலுவலர்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை நீரை அளவீடு செய்து வருகின்றனர். மேலும், தற்போது அதிகப்படியான நீர் வந்து கொண்டிருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்பு நேற்று முன்தினம் மாலை மதகுகளின் வழியே 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், மழையின் தாக்கம் குறைந்ததன் எதிரொலியாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,980 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.27 அடியாக உள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் செம்பரம்பாக்கம் ஏரியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 10 மணிக்கு 750 கன‌அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+