சென்னை வேளச்சேரியில் இளைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்பு.. செங்கல்பட்டு கலெக்டர் வெளியிட்ட குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் விவேஷியஸ் அகாடமி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சியும் அளிக்கப்பட உள்ளதாக செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் விவேஷியஸ் அகாடமி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடச்சியாக தற்போது சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகடாமி நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும்.
பயிற்சிக்கான கால அளவு 30 நாட்கள் ஆகும். மேலும் சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழும் வழங்கப்படும்.
இந்த பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications