சார் எலும்பு கூடு இருக்கு! போலீசுக்கு போன கால்.. பம்ப் செட்டில் பார்த்தால் ஷாக்! பதறிய செங்கல்பட்டு

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வெல்லப்பட்டு கிராமத்தில் மனித மண்டை ஓடு, எலும்பு கூடு சிதறிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை விசாரணை செய்த போலீசார் அதிர்ச்சி அளிக்கும் கிரைம் ஒன்றை பற்றி கண்டுபிடித்து உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வெல்லப்பட்டு கிராமத்தில் வயல் வெளி ஒன்றில் இந்த மண்டை ஓடு, எலும்பு கூடு கிடந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி விவசாயிகள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட போலீசார் இங்கே வந்து ஆய்வு செய்தனர். அங்கு இருந்த மண்டை ஓடு, எலும்பு கூடு ஆகியவற்றை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

அங்கே மண்டை ஓடு, எலும்பு கூடுகள் ஆய்வு செய்யப்பட்டு இருக்கின்றன. எப்போது இந்த உடல் இறந்து இருக்கும் என்று அந்த எலும்புகளில் இருக்கும் சிறிய அளவிலான சதை பகுதிகளை வைத்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்துள்ளனர். இன்னொரு பக்கம் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த வயல் பகுதிக்கு அருகே குடியிருக்கும் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த பலரும்.. அங்கே இருக்கும் பம்ப் செட் ஒன்றில் இருக்கும் குடும்பத்தை கைகாட்டி உள்ளனர். அந்த பம்ப் செட்டில் கணவன் - மனைவி தம்பதிகள் கைக்குழந்தையுடன் தங்கி வந்துள்ளனர்.

சித்ரா

சித்ரா

அந்த பெண்ணின் பெயர் சித்ரா என்று போலீசாரிடம் பக்கத்து வீட்டினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2-3 வாரமாக இவர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. குடும்பத்தோடு இவர்கள் காணாமல் போய்விட்டதாக போலீசாரிடம் பக்கத்து வீட்டினர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த குடும்பத்தினரை போலீசார் தேடி வந்துள்ளனர். அவர்கள் போன ஆட்டோ, பஸ் போன்றவற்றை வைத்து சில ஊர்கள் தள்ளி ஒரு இடத்தில் சித்ரா தங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சித்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணை

விசாரணை

சித்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உங்கள் கணவன் எங்கே என்று கேள்வி கேட்கப்பட்டது. முதலில் தனது கணவன் காணாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கு அவர் மழுப்பலாக பல்வேறு பதில்களை அளித்துள்ளார். ஆனால் தொடர் விசாரணையில் அந்த எலும்பு கூடே தனது கணவன் சந்திரனின் எலும்பு கூடுதான் என்று உண்மையை ஒப்புக்கொண்டு உள்ளார். இவர்கள் இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பாபு என்பவரின் வயலில் இவர்கள் வேலை பார்த்துக்கொண்டு அங்கேயே பம்ப் செட்டில் வசித்து வந்துள்ளனர்.

சக்திவேல்

சக்திவேல்

இந்த நிலையில்தான் சித்ராவிற்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் தவறான உறவு இருந்துள்ளது. இதில் சக்திவேலுடன் சித்ரா அடிக்கடி தனியாக இருந்துள்ளார். கணவன் இல்லாத நேரத்தில் பம்ப் செட்டிற்கு சக்திவேலை வரவைத்து சித்ரா உல்லாசமாக இருந்துள்ளார். ஒருநாள் இதை சந்திரன் நேரில் பார்க்கவே, பம்ப் செட் உள்ளேயே வைத்து சக்திவேலை சரமாரியாக தாக்கி உள்ளார். பதிலுக்கு இருவரும் சேர்ந்து சந்திரனை அடித்து உதைத்து உள்ளனர்.

 தவறான உறவு

தவறான உறவு

இந்த தாக்குதலில் சந்திரன் அங்கேயே மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து அவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அங்கே இருக்கும் ஏரிப்பகுதியில் புதைத்து உள்ளனர். இதில் உள்ள மண்டை ஓடு மற்றும் எலும்புகள்தான் நாய் மூலம் தோண்டப்பட்டு வெளியே வந்துள்ளது. அதைத்தான் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். ஒரு அடி ஆழத்தில் இவர்கள் சடலத்தை புதைத்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. போலீசிடம் சித்ரா கொலையை ஒப்புக்கொண்ட நிலையில், சக்திவேலையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+