கிளாம்பாக்கத்தை விடுங்க.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா? இதை பார்த்தா மலைச்சுடுவீங்க
சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.150.05 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதில் செங்கல்பட்டில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (15.11.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 150 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையம், மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம், உள்விளையாட்டு அரங்கம், பூங்கா, பேருந்துநிலையம் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதியை மேம்படுத்தும் பணி ஆகிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னைப் பெருநகரப் பகுதியின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு விரிவான திட்டமிடல் தேவை என்பதை உணர்ந்து 1972-ல் மெட்ராஸ் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் தற்காலிக அமைப்பாக இருந்து, பின்னர் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ் சட்டப்பூர்வ குழுமமாக மாற்றப்பட்டது. சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைகேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், நிலவகைப்பாடுகளில் உபயோக மாற்றங்களை முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கத்தில் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையம், அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் 13.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி, கொண்டித்தோப்பில் 11.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம், கோயம்பேடு சாலை சந்திப்பில் 10.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள இயற்கை வனப்புடன் புதிய பூங்கா, மயிலாப்பூர், முண்டகக் கண்ணியம்மன் கோயில் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் 8.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய உள்விளையாட்டு அரங்கம் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதியில் 8.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடற்கரை பகுதியை மேம்படுத்தும் பணி; என மொத்தம் 150 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு. பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. அன்சூல் மிஸ்ரா, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு பேருந்து நிலையம் : சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் செங்கல்பட்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தொடங்க உள்ளன.
கடந்த சில வாரங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.
ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் செங்கல்பட்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தொடங்க உள்ளன. செங்கல்பட்டில் பஸ் ஸ்டான்ட் அமைக்க டெண்டா் கோரப்பட்டுள்ளது. ரூ.40 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் இங்கே அமைக்கப்பட உள்ளது.
சென்னைக்குட்பட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் பலர் இதனால் செங்கல்பட்டில் வசிக்க விரும்பி வருகிறார்கள். இதனால் அங்கே மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் அங்கே பேருந்து நிலையத்தை புதிதாக அமைக்க முடிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வெண்பாக்கம் ஊராட்சி அருகே 14 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலையில் விரைவில் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications