செங்கல்பட்டு பயணிகளின் பல வருட ஏக்கம்! புதிய பேருந்து நிலையம் எப்போது திறப்பு? அதிகாரிகள் குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில், நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில், 46,339 சதுர அடி பரப்பில் கடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் காரணமாக பேருந்து நிலைய திறப்ப் பணிகள் தாமதம் ஆன நிலையில் தற்போது இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு சென்னையின் நுழைவு வாயில் போல இருப்பது செங்கல்பட்டுதான். சென்னையில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகளும், தென் மாநிலங்களில் இருந்தும் பேருந்துகள் செங்கல்பட்டு வந்து செல்கின்றன.

Chengalpattu new bus terminus likely to open in October says CMDA Officials

செங்கல்பட்டு அதிநவீன பேருந்து நிலையம்

செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளுக்கும் தனியார், அரசு பேருந்துகள் என எப்போதும் படு பிசியாக இருக்கக் கூடிய செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் வெறும் 15 பேருந்துகளை மட்டுமே நிறுத்த முடியும். நகரின் மையப்பகுதியில் இந்த பேருந்து நிலையம் இருப்பதால், அங்கு கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை முந்தைய திமுக அரசு மேற்கொண்டது.

57 பேருந்துகளை நிறுத்துவற்கான வசதிகளுடன் இந்த நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைகிறது. சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு நிகராக பிரமாண்டமாக, நவீன வசதிகளுடன் இந்த பேருந்து முனையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையத்தில், 46,339 சதுர அடி பரப்பில் கடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

எப்போது திறக்கப்படும்?

இந்த பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு செங்கல்பட்டு பயணிகள் மத்தியில் நிலவி வந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 120 கோடி மதிப்பீட்டில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ள நிலையில் பேருந்து நிலைய பராமரிப்பு பணிக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. பொது - தனியார் பங்களிப்பு (PPP) மாடலில் பேருந்து நிலைய பரமாரிப்பு நடைபெறும்.

15 வருடங்களுக்கு பராமரிப்பு பணிகள் மற்றும் பேருந்து நிலைய பிற பணிகளுக்காக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்குள் ஒரு பேருந்து வந்து செல்ல ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் வசூல் செய்யும் உரிமை பராமரிப்பு பணிகளை டெண்டர் எடுக்கும் நிறுவனம் செய்யும். அதுபோக, சில்லரை விற்பனைக்கான கடைகள், விளம்பரம், பார்க்கிங் மற்றும் பயணிகள் ஓய்வு அறை ஆகியவற்றை பராமரிப்பது, கட்டணம் வசூலிப்பது ஆகிய பணிகளை தனியார் நிறுவனமே மேற்கொள்ளும்.

1,050 பேருந்துகள் வந்து செல்லும்

செங்கல்பட்டு பேருந்து நிலையத்திற்கு தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், எம்.டி.சி பேருந்துகள், தனியார் பேருந்துகள் என ஒரு நாளைக்கு தோராயமாக 1,050 பேருந்துகள் வந்து செல்லும். கடைகளுக்கான வாடகை, விளம்பர கட்டணம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான வாகன நிறுத்தக் கட்டணம் ஆகியவற்றை தற்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஒப்பந்ததாரரே நிர்ணயித்துக் கொள்ளலாம்.

அதேநேரத்தில், பஸ் நுழைவுக் கட்டணம், இருசக்கர வாகன நிறுத்தக் கட்டணம் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறை கட்டணம் ஆகியவற்றின் கட்டுப்பாடு சி.எம்.டி.ஏ. வசமே இருக்கும். பேருந்து நிலையத்தின் அன்றாட பராமரிப்பு பணிகளை குறைந்தபட்சம் 70 பணியாளர்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில், 368 டூ வீலர்கள், 63 கார்கள் நிறுத்தும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2 மாதத்தில் திறக்கப்படும்

சிஎம்டிஏ அதிகாரிகள் கூறுகையில், "தேர்தல் காரணமாக பேருந்து நிலைய திறப்ப் பணிகள் தாமதம் ஆனது. தற்போது இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்" என்றார். செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி, பெங்களூர், புதுவை, சித்தூர், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திண்டிவனம், மாமல்லபுரம், கல்பாக்கம், தாம்பரம், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+