நள்ளிரவில் திக்திக்! பாமக நிர்வாகியை சுற்றி வளைத்து வெட்டி சாய்த்த மர்ம கும்பல்! செங்கல்பட்டில் பரபர
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நகரச் செயலாளராக இருந்த நாகராஜன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகி திடீரென மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யவும் உறவினர்கள் அனுமதிக்கவில்லை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த போலீசார் முயன்று வருகின்றனர்.

படுகொலை: செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தவர் நாகராஜ். இவர் செங்கல்பட்டு மாவட்ட பாமக நகரச் செயலாளராக இருந்துள்ளார். இவரைத் தான் மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளார். தப்பியோடிய கும்பலைச் செங்கல்பட்டு போலீசார் தீவிரமாகத் தேடித் தேடி வருகின்றனர்.
மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த நாகராஜ், இன்று இரவு வழக்கம் போல இரவு 9 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் நாகராஜன் அப்படியே சரிந்தார்.

உயிரிழப்பு: மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி தாக்குதல் நடத்தியதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் இப்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருக்கிறது. இருப்பினும் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கே ஒரு வித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகரப் பகுதியில் பாமக நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடரும் சம்பவங்கள்: கடந்த ஒரு மாத்திற்கு முன்பு மறைத்தலை நகர்ப் பகுதியில் பாமகவின் மனோகரன் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து காளிதாஸ் என்ற பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்டார். இப்படி அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் பாமகவினர் உடலைப் பிணவறைக்கு எடுத்துச் செல்ல விடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் உடலுக்குப் புரத பரிசோதனை செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் நேரம் செல்ல செல்ல நிர்வாகிகள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது
சாலை மறியல்: மேலும், உறவினர்கள் செங்கல்பட்டு திண்டிவனம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் இறங்கியுள்ளனர். இதனால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு டிஎஸ்பி, போராட்டம் நடத்துவோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications